×

நொய்யல் கழிவால் நுரை, துர்நாற்றம்

கோவை, பிப்.29: கோவை நொய்யல் ஆறு செம்மேடு கூடுதுறையில் துவங்கி ஈரோடு மாவட்டம் கொடுமுடி காவிரி வரை 97 கிமீ தூரம் பாய்கிறது. ஆறு துவங்கும் இடத்தில் கிராம குடியிருப்புகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவு நீர் ஆற்றில் விடப்படுகிறது. நகரில் தினமும் 20 கோடி லிட்டர் கழிவு நீர் நொய்யல் ஆற்றில் பாய்கிறது. உக்கடம் கழிவு நீர் பண்ணையில் இருந்து தினமும் 70 லட்சம் லிட்டர் கழிவு நீர் அறைகுறையாக சுத்திகரித்து விடப்படுகிறது.

பேரூர், செல்வபுரம், குனியமுத்தூர், ஆத்துப்பாலம், போத்தனூர், குறிச்சி, ராமநாதபுரம், சிங்காநல்லூர், உப்பிலிபாளையம், சவுரிபாளையம், ஒண்டிப்புதூர் வரை மொத்த கழிவு நீரும் நொய்யலில் பாய்ந்து பட்டணம்புதூர் தடுப்பணை கடந்து செல்கிறது. பல இடங்களில் ஆற்றில் பாயும் கழிவு நீரில் பொங்கும் நுரை அதிகமாக காணப்படுகிறது. துர்நாற்றமும் அடிக்கிறது.

நொய்யல் கரையோர மக்கள் கூறுகையில், ‘‘சோப்பு கம்பெனி உட்பட பல்வேறு கம்பெனிகளில் இருந்து ஆற்றில் கழிவு நீர் விடப்படுகிறது. இந்த கம்பெனிகளை மூடவேண்டும். ஆற்றில் வரும் நீரில் கழிவு அளவை கணக்கிடவேண்டும். இதை தடுக்க நடவடிக்கை எடுக்கவேண்டும். இது தொடர்பாக உள்ளாட்சி நிர்வாகம், மாசு கட்டுப்பாட்டு வாரியம், பொதுப்பணித்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். வணிக நிறுவனம், வீடுகள், பல்வேறு நிறுவனங்களில் இருந்து கழிவு நீர் வெளிப்படையாக விடப்படுகிறது. மேடு பள்ளங்களில் கழிவு நீர் பாயும்போது நுரை அதிகமாகிறது.

கழிவு நீரை கோவை நகர் பகுதியிலேயே தடுக்கவேண்டும். மாநகராட்சி நிர்வாகம் கழிவு நீரை விடாமல் நிறுத்தினால் தான் இந்த பிரச்னையை தீர்க்க முடியும்’’ என்றனர்.

The post நொய்யல் கழிவால் நுரை, துர்நாற்றம் appeared first on Dinakaran.

Tags : KOWAI ,KOWAI NOYAL ARU ,KERUMUDI KAVIRI ,ERODE DISTRICT ,Dinakaran ,
× RELATED வால்பாறை அருகே காட்டு மாடு முட்டி தேயிலை தோட்ட தொழிலாளி பலி..!!