×

இடைநிலை ஆசிரியர்கள் மறியல்

தஞ்சாவூர், பிப்.29: இடைநிலை ஆசிரியர்கள் சம வேலை சம ஊதியம் வழங்க கோரி தஞ்சை பழைய பேருந்து நிலையத்திலிருந்து இடைநிலை ஆசிரியர்கள் பேரணியாக வந்து முதன்மை கல்வி அலுவலகத்தை முற்றுகையிட முயன்றனர். பின்பு திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.தஞ்சாவூர் பனகல் மாளிகையில் இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் இயக்கம் சார்பில் சம வேலை சம ஊதியம் வழங்க கோரி சென்னையில் தொடர் முற்றுகை போராட்டம் மற்றும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்களில் கோரிக்கை நிறைவேறும் வரை தொடர் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று இடைநிலை ஆசிரியர்கள் தஞ்சை பழைய பேருந்து நிலையத்தில் இருந்து பேரணியாக வந்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தை முற்றுகையிட்டனர். பின்பு திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதில் ஈடுபட்ட 120 ஆசிரியர் ஆசிரியைகளை போலீசார் கைது
செய்தனர்.

The post இடைநிலை ஆசிரியர்கள் மறியல் appeared first on Dinakaran.

Tags : Thanjavur ,Thanjavur Old Bus Station ,Primary Education Office ,Dinakaran ,
× RELATED தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையத்தில் 100...