×

கஞ்சா பதுக்கிய வாலிபர் கைது

கிருஷ்ணகிரி, பிப்.29: பேரிகை போலீஸ் எஸ்ஐ கண்ணன் தலைமையிலான போலீசார், தீர்த்தம் சாலை அரசு மேல்நிலைப்பள்ளி பகுதியில் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது அங்கு சந்தேகப்படும் படியாக நின்று கொண்டிருந்த வாலிபரை பிடித்து விசாரித்தனர். அதில் அவர், பேரிகை வனத்துறை செக்போஸ்ட் பகுதியை சேர்ந்த பாலாஜி (23) என்பதும், அவரிடம் 100 கிராம் கஞ்சா இருந்ததும் தெரியவந்தது. தொடர்ந்து போலீசார் அவரை கைது செய்து, அவரிடம் இருந்த கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

The post கஞ்சா பதுக்கிய வாலிபர் கைது appeared first on Dinakaran.

Tags : Krishnagiri ,Barikai Police ,SI Kannan ,Theertham Road Government Higher Secondary School ,Parikai Forestry Checkpost ,Dinakaran ,
× RELATED வாக்கு எண்ணும் மையத்தில் முன்னேற்பாடு பணிகள் தீவிரம்