×

வீட்டு முன் நிறுத்திய டிராக்டர் திருட்டு

 

கிருஷ்ணகிரி, பிப்.29: கெலமங்கலம் தியாகரசனபள்ளி பகுதியைச் சேர்ந்தவர் எல்லப்பரெட்டி (60), விவசாயி. இவருக்கு சொந்தமான டிராக்டரை கடந்தாண்டு நவம்பர் 12ம் தேதி வீட்டின் முன்பு நிறுத்தியிருந்தார். திடீரென டிராக்டரை காணவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த அவர், பல்வேறு இடங்களில் தேடி பார்த்தும் கிடைக்கவில்லை. இதுகுறித்து எல்லப்பரெட்டி கெலமங்கலம் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post வீட்டு முன் நிறுத்திய டிராக்டர் திருட்டு appeared first on Dinakaran.

Tags : Krishnagiri ,Ellapareddy ,Kelamangalam Thiagarasanapalli ,Dinakaran ,
× RELATED வாக்கு எண்ணும் மையத்தில் முன்னேற்பாடு பணிகள் தீவிரம்