×

சிக்னல் கம்பம் சாய்ந்து 2 டூவீலர்கள் சேதம்

கிருஷ்ணகிரி, பிப்.29: கிருஷ்ணகிரி 5 ரோடு ரவுண்டானா பகுதியில், போக்குவரத்து சிக்னல்கள் உள்ளன. இதில் காந்தி ரோட்டில் இருந்து 5 ரோடு வரும் இடத்தில் அமைந்துள்ள சிக்னல் கம்பம், அடிப்பகுதியில் துருப்பிடித்த நிலையில் இருந்தது. இந்நிலையில் நேற்று மதியம், அந்த சிக்னல் கம்பம் திடீரென சாலையில் சாய்ந்தது. இதில் கம்பத்தையொட்டி நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 2 டூவீலர்கள் நசுங்கி சேதமடைந்தது. கம்பம் சாய்ந்த போது பொதுமக்கள் யாரும் அப்பகுதியில் செல்லாததால் உயிர் சேதம் ஏற்படவில்லை. இதையடுத்து போக்குவரத்து பிரிவு போலீசார் அங்கு சென்று, சாலையில் சாய்ந்து கிடந்த சிக்னல் கம்பத்தை அப்புறப்படுத்தி, போக்குவரத்தை சரி செய்தனர்.

The post சிக்னல் கம்பம் சாய்ந்து 2 டூவீலர்கள் சேதம் appeared first on Dinakaran.

Tags : Krishnagiri ,Krishnagiri 5 Road ,5 road ,Gandhi road ,Dinakaran ,
× RELATED வாக்கு எண்ணும் மையத்தில் முன்னேற்பாடு பணிகள் தீவிரம்