×

இனி பணமே தேவையில்லை.. யுபிஐ, கார்டு மூலம் டிக்கெட் வாங்கலாம்.. சென்னை மாநகர பேருந்துகளில் புதிய வசதி அறிமுகம்..!!

சென்னை: சென்னை மாநகர பேருந்துகளில் யு.பி.ஐ. மூலம் டிக்கெட் பெறும் வசதி நடைமுறைக்கு வந்துள்ளது. தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக கடந்த சில ஆண்டுகளாக இந்தியா முழுவதிலும் ஆன்லைன் பணப்பரிவர்த்தனைகள் அதிகரித்துள்ளது. பூ விற்பனை செய்யும் வியாபாரிகள் உள்பட அனைத்து பரிவர்த்தனைகளும் டிஜிட்டலுக்கு மாறி உள்ளன. தற்போது ரயில் நிலையங்கள், மெட்ரோ உள்ளிட்டவற்றிலும் யுபிஐ மூலம் டிக்கெட் எடுக்கும் வசதிகள் உள்ளது. இதன் தொடர்ச்சியாக பேருந்துகளிலும் பயணச்சீட்டு பெற யுபிஐ. வசதியை தமிழ்நாடு அரசு அமல்படுத்தி உள்ளது.

யுபிஐ முறையை பயன்படுத்தி சென்னை மாநகரப் பேருந்துகளில் பயணச்சீட்டு பெற்றுக்கொள்ளும் வகையில் புதிய கையடக்க கருவிகள் நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டிருக்கிறது. இதனிடையே சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகத்திற்கு 50 BS-VI புதிய பேருந்து சேவைகளை போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர், விளையாட்டுத் துறை உதயநிதி ஆகியொர் தொடக்கி வைத்த நிலையில், மேலும், சென்னை மாநகரப் பேருந்துகள் மற்றும் அரசு விரைவு பேருந்துகளில் பயணிகள் வசதிக்காக யுபிஐ, கார்டுகள் மூலம் பயணச்சீட்டு பெறும் மின்னணு இயந்திரத்தை அமைச்சர்கள் நடத்துநர்களுக்கு வழங்கினர்.

அத்துடன், தமிழ்நாடு போக்குவரத்துத் துறை சார்பில் சென்னை கிண்டியில் போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்பு ஆணையரகத்தின் புதிய அலுவலகம் ரூ.41.90 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ளது. அதனை இன்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார். மேலும், சென்னை, திருச்சி, விழுப்புரத்தில் ரூ.70.73 லட்சம் செலவில் அங்குள்ள பணிமனைகளை தானியங்கி பணிமனைகளாக மேம்படுத்துவதற்கான திட்டத்தையும் அமைச்சர் தொடங்கி வைத்தார். #TNPSC மூலம் போக்குவரத்துத்துறை தானியங்கி பொறியாளர்கள் – தொழில்நுட்ப உதவியாளர்கள் உள்ளிட்ட பணிகளுக்கான தேர்வில் வெற்றி பெற்றோருக்கான பணி நியமன கடிதங்களை வழங்கி அவர்களை அமைச்சர்கள் வாழ்த்தினர்.

பேருந்துகளில் எப்படி டிக்கெட் எடுப்பது ?

*இதற்காக எஸ்பிஐ நிறுவனம் கார்டு வழங்குகிறது.இதை பேருந்து நிலைய அலுவலகங்களில் சென்னையில் வாங்கலாம். அதை உங்கள் வங்கி கணக்கோடு இணைத்து ரீ சார்ஜ் செய்ய வேண்டும்.

*பேருந்தில் ஏறியதும்.. நீங்கள் செல்ல வேண்டிய இடத்தை சொன்னால் அதை இந்த மெஷினில் நடத்துனர் பதிவு செய்வார்.

* அதன்பின் உங்கள் கார்டை டேப் செய்தால்.. பணம் தானாக அரசு கணக்கிற்கு சென்று விடும்.இதையடுத்து டிக்கெட் பிரிண்ட் ஆகிவிடும்.

* இதுவே கடைகளில் செலுத்துவது போல யுபிஐ மூலம் பணம் செலுத்தியும் டிக்கெட் எடுக்கலாம். மெஷினில் மாட்டும் க்யூ ஆர் கோட்டை பயன்படுத்தி டிக்கெட் எடுக்கலாம்.

The post இனி பணமே தேவையில்லை.. யுபிஐ, கார்டு மூலம் டிக்கெட் வாங்கலாம்.. சென்னை மாநகர பேருந்துகளில் புதிய வசதி அறிமுகம்..!! appeared first on Dinakaran.

Tags : UPI ,Chennai Municipal Buses ,Chennai ,Chennai Municipal Buses B. ,India ,Dinakaran ,
× RELATED முன்பதிவில்லா ரயில் டிக்கெட்டுகளை யுபிஐ மூலம் பெறும் வசதி அறிமுகம்