×

நெய் முறுக்கு

தேவையானவை:

பச்சரிசி, உளுந்து தலா ஒரு கப்,
சீரகம் ஒரு டீஸ்பூன்,
நெய் பொரிப்பதற்குத் தேவையான அளவு,
உப்பு தேவைக்கேற்ப.

செய்முறை:

பச்சரிசியைக் கழுவி, களைந்து, நிழலில் உலர்த்தவும். நன்கு காய்ந்ததும் உளுந்துடன் சேர்த்து, மெஷினில் கொடுத்து நைஸாக அரைக்கவும். அரைத்த மாவை சலித்து ஒரு வாயகன்ற பேஸினில் போட்டு… உப்பு, சீரகம் சேர்த்து நீர் விட்டு பிசைந்து, கைகளால் முறுக்கு சுற்றி, துணியில் போட்டு அரை மணி நேரம் உலரவிடவும். வாயகன்ற வாணலியில் நெய்யை ஊற்றி, சூடானதும் அடுப்பை குறைந்த தீயில் வைத்து, சுற்றி வைத்த முறுக்கைப் போட்டு, ஒருபுறம் வெந்ததும் திருப்பிப்போட்டு, மறுபுறமும் வெந்ததும் எடுக்கவும்.

The post நெய் முறுக்கு appeared first on Dinakaran.

Tags :
× RELATED கிரில் ஃபிஷ்