×

முத்துப்பேட்டை அருகே கூலி தொழிலாளியை தாக்கிய தந்தை, மகன் கைது

முத்துப்பேட்டை, பிப். 28: முத்துப்பேட்டை அருகே முன்விரோதம் காரணமாக கூலி தொழிலாளியை தாக்கிய தந்தை, மகனை போலீசார் கைது செய்தனர். முத்துப்பேட்டை கற்பகநாதர்குளம் காடுவெட்டி கிராமத்தை சேர்ந்த விவசாய கூலித்தொழிலாளி சுப்பிரமணியன் (40). இவரை நேற்று முன்தினம் முன்விரோதம் காரணமாக, அதே பகுதியை சேர்ந்த பாலகிருஷ்ணன் (59) , இவரது மகன் பிரகாஷ்(38) ஆகியோர் சேர்ந்து சரமாரியாக தாக்கினர். இதில் பலத்த காயம் அடைந்த சுப்பிரமணியன் திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இதுகுறித்து வழக்கு பதிவு செய்த முத்துப்பேட்டை சப் இன்ஸ்பெக்டர் சண்முகம், சுப்பிரமணியத்தை தாக்கிய தந்தை மற்றும் மகனை கைது செய்து திருத்துறைப்பூண்டி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைத்தனர்.

The post முத்துப்பேட்டை அருகே கூலி தொழிலாளியை தாக்கிய தந்தை, மகன் கைது appeared first on Dinakaran.

Tags : Muthuppet ,Muthupet ,Subramanian ,Kaduvetti ,Karpaganatharakulam, Muthupet ,
× RELATED முத்துப்பேட்டை அருகே கலைத்திருவிழா...