×

கன்னியாகுமரியில் பைக்கில் இருந்து விழுந்து டெய்லர் பலி

கன்னியாகுமரி, பிப்.28 : திருநெல்வேலி மாவட்டம் ஏர்வாடி பகுதியை சேர்ந்தவர் இசக்கியப்பன். இவரது மகன் சங்கர் (19), டெய்லர். சம்பவத்தன்று பைக்கில், கன்னியாகுமரியை சுற்றி பார்க்க வந்தார். ஜீரோ பாயிண்ட் அருகில் பைக்கில் சென்று கொண்டிருந்த போது, திடீரென பைக்கில் தடுமாறி கீழே விழுந்தார். காயம் அடைந்த சங்கரை சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்திருந்தனர். அங்கு தீவிர சிகிச்சையில் இருந்து வந்த சங்கர், நேற்று முன் தினம் பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து கன்னியாகுமரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

The post கன்னியாகுமரியில் பைக்கில் இருந்து விழுந்து டெய்லர் பலி appeared first on Dinakaran.

Tags : Taylor ,Kanyakumari ,Ishakiyappan ,Airwadi ,Tirunelveli district ,Shankar ,
× RELATED கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையில் ஒன்றிய அமைச்சர் அமித்ஷா ரோடு ஷோ..!!