×

கட்டிட பொறியாளர் சங்கம் ஆர்ப்பாட்டம்

கரூர், பிப். 28: கட்டுமான பொருட்களின் விலை ஏற்றத்தை குறைக்க கோரி கரூர் மாவட்ட கட்டிட பொறியாளர் சங்கத்தினர் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கரூர் தலைமை தபால் நிலையம் அருகே நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு நிர்வாகி ராமசாமி தலைமை வகித்தார். அனைத்து நிர்வாகிகளும் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர். கட்டிட பணிக்கு தேவையான எம்.சாண்ட், பி.சாண்ட் மற்றும் ஜல்லி, அரவை ஆகிய கட்டுமான பொருட்களின் விலை ஏற்றத்தை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

The post கட்டிட பொறியாளர் சங்கம் ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Tags : Civil Engineers Association ,Karur ,Karur District Building Engineers Association ,Administrator ,Ramasamy ,Karur Head Post Office ,Building Engineers Union ,Dinakaran ,
× RELATED 2000 ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்ட கரும்பு அறுவடை பணிகள் தீவிரம்