×

கரூரில் மாற்றுக் கட்சியினர் மதிமுக கட்சியில் ஐக்கியம்

கரூர், பிப். 28: கரூரில் மதிமுக சார்பில் நடைபெற்ற தேர்தல் பணி பூத் கமிட்டி அமைப்பது தொடர்பான கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் ஆசை சிவா தலைமை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக கட்சியின் பொருளாளர் செந்திலதிபன், துணைப் பொதுச் செயலாளர் டாக்டர் ரொஹையா ஆகியோர் முன்னிலையில் மாற்றுக் கட்சியினர்.90 பேர் மதிமுக கட்சியில் இணைந்தனர். கட்சியில் இணைந்தவர்களுக்கு மாவட்டச் செயலாளர் ஆசை சிவா பொன்னாடை வழங்கி வாழ்த்து தெரிவித்தார். நிகழ்ச்சியில் அவைத் தலைவர் ஆண்டிப்பட்டி ராமசாமி, ஏ.பி.கே. பழனிச்சாமி, ஏஓன். தங்கவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

The post கரூரில் மாற்றுக் கட்சியினர் மதிமுக கட்சியில் ஐக்கியம் appeared first on Dinakaran.

Tags : Karur ,Madhyamik Party ,Madhyamik ,District Secretary ,Aasi Siva ,Treasurer ,Senthiladipan ,Deputy General Secretary ,
× RELATED மதிமுக தேர்தல் அறிக்கை வெளியீடு