×

சமவேலைக்கு சம ஊதியம் கேட்டு இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் இயக்கம் ஆர்ப்பாட்டம்

கரூர், பிப். 28: சமவேலைக்கு சம ஊதியம் கேட்டு இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் இயக்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கரூர் தாந்தோணிமலை வட்டார போக்குவரத்து அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட செயலாளர் நாகராஜ் தலைமை வகித்தார். அனைத்து நி£வாகிகளும் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு கோரிக்கை குறித்து பேசினர். இந்த ஆர்ப்பாட்டத்தில், சமவேலைக்கு சம ஊதியம் என்பன போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

The post சமவேலைக்கு சம ஊதியம் கேட்டு இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் இயக்கம் ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Tags : Intermediate ,Registered Senior Teacher ,Movement ,Karur ,Intermediate Registered Senior Teacher Movement ,District Secretary ,Nagaraj ,Karur Danthonimalai Regional Transport Office ,Intermediate Register Senior Teacher Movement ,Dinakaran ,
× RELATED அறப்போர் இயக்கம் வெளியிட்டது;...