×

முதல்வர் பிறந்தநாள் பொதுக்கூட்டத்தில் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள்: எம்எல்ஏ சுந்தர் வழங்கினார்

மதுராந்தகம்: மதுராந்தகம் அருகே நடந்த முதல்வர் பிறந்தநாள் பொதுகூட்டத்தில் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை எம்எல்ஏ சுந்தர் வழங்கினார். செங்கல்பட்டு மாவட்டம், அச்சிறுப்பாக்கம் வடக்கு ஒன்றிய திமுக சார்பில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழா மற்றும் பாசிசம் வீழட்டும் இந்தியா வெல்லட்டும் என்ற தலைப்பில் பொதுக்கூட்டம் மதுராந்தகம் அடுத்த மொறப்பாக்கம் கிராமத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு ஒன்றிய செயலாளர் தம்பு தலைமை தாங்கினார். பொதுக்குழு உறுப்பினர் நாராயணன், அவைத்தலைவர் சிவபெருமான், ஒன்றிய குழு துணை பெருந்தலைவர் விஜயலட்சுமி கருணாகரன், கலை இலக்கிய அணி அமைப்பாளர் கண்ணதாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விவசாய தொழிலாளர் அணி தலைவர் மணி அனைவரையும் வரவேற்றார்.

சிறப்பு அழைப்பாளர்களாக காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட செயலாளர் சுந்தர் எம்எல்ஏ, காஞ்சிபுரம் எம்பி செல்வம், தொகுதி பொறுப்பாளர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன், தலைமை கழக பேச்சாளர் ரவீந்திரன், நாத்திகம் நாகராஜன் உள்ளிட்ட கலந்து கொண்டு பேசினர். இதனைத்தொடர்ந்து, அச்சிறுப்பாக்கம் ஒன்றியங்களில் உள்ள அரசு பள்ளிகளில் பொதுத்தேர்வில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவ – மாணவிகளுக்கு ஊக்கத்தொகை, 10 விவசாயிகளுக்கு மருந்து தெளிப்பான் இயந்திரம் மற்றும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட 2 ஆயிரம் மகளிருக்கு புடவைகளை காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட செயலாளர் சுந்தர் வழங்கினார். இந்நிகழ்ச்சியில், மாவட்ட கவுன்சிலர் மாலதி, நிர்வாகிகள் வேதாச்சலம், வேணு, கோபி, சிலம்பரசன், சரத்குமார், இளங்கோ, பத்மா, சசிகுமார், ராம்குமார், உள்ளிட்ட இளைஞர்கள், திமுக முன்னோடிகள் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

The post முதல்வர் பிறந்தநாள் பொதுக்கூட்டத்தில் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள்: எம்எல்ஏ சுந்தர் வழங்கினார் appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,MLA ,Sundar ,Madhurandakam ,Maduraandakam ,Chengalpattu District ,Atchirupakkam North Union DMK ,DMK ,President ,M.K.Stal ,India ,
× RELATED வாக்குச்சாவடி முகவர்கள் விழிப்புடன்...