×

மின் இணைப்பு வழங்காததை கண்டித்து மூதாட்டி தர்ணா போராட்டம்

கூடுவாஞ்சேரி: ஊராப்பாக்கத்தில், மின் இணைப்பு வழங்காமல் கடந்த 2 ஆண்டுகளாக அலைகழித்ததை கண்டித்து மின்வாரியம் அலுவலகம் வாசலில் அமர்ந்து மூதாட்டி தர்ணா போராட்டம் நடத்தில் ஈடுபட்டார். இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை, தாம்பரம் அடுத்த கோவிலம்பாக்கம், பிரதான சாலையை சேர்ந்தவர் காவேரி. இவரது மனைவி விஜயா (72). இவருக்கு 3 மகள்கள், ஒரு மகன் உள்ளனர். இந்நிலையில், விஜயா ஊரப்பாக்கத்தில் உள்ள மின்சார வாரிய அலுவலகத்துக்கு சென்று உதவி பொறியாளரிடம் கடந்த இரண்டு ஆண்டுகளாக மின் இணைப்பு வழங்காமல் எதற்காக அலைகழிக்க வைக்கிறீர்கள் என்று கேட்டு அலுவலகத்தின் வாசலில் நேற்று மதியம் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இதனால், ஊரப்பாக்கத்தில் உள்ள மின் வாரியம் அலுவலகத்தில் நேற்று பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

The post மின் இணைப்பு வழங்காததை கண்டித்து மூதாட்டி தர்ணா போராட்டம் appeared first on Dinakaran.

Tags : Mudhati dharna ,Kuduvanchery ,Urapakkam ,Electricity Board ,Main Road ,Kovilambakkam ,Tambaram, Chennai ,
× RELATED கூடுவாஞ்சேரி அருகே தனிநபர் ஆக்கிரமித்துள்ள சுடுகாட்டை மீட்க கோரிக்கை