×

திண்ணை பிரசாரத்தில் இல்லம்தோறும் துண்டு பிரசுரம்: நாசர் எம்எல்ஏ வழங்கினார்

ஆவடி: திண்ணைப் பிரசாரத்தில் இல்லம்தோறும் துண்டு பிரசுரங்களை நாசர் எம்எல்ஏ வழங்கினார். ‘இல்லம் தோறும் ஸ்டாலின் குரல்’ மற்றும் திண்ணைப் பிரசாரத்தை சில தினங்களுக்கு முன்பு திமுக தொடங்கியது. பாராளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் வெற்றி பெறுவதற்கு திமுகவினர் கடுமையாக பணியாற்றி வருகின்றனர். இதற்காக தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் ஆணைக்கிணங்க அனைத்து நிர்வாகிகளுடன் அடுத்தடுத்து ஆலோசனை கூட்டங்கள் நடத்தப்பட்டன. பின்னர் ஒவ்வொரு அணிகளின் சார்பிலும் தேர்தல் ஆலோசனை கூட்டங்கள் நடத்தப்பட்டன.

இந்நிலையில், திருவள்ளூர் மத்திய மாவட்டச் செயலாளரும், ஆவடி எம்எல்ஏவுமான சா.மு.நாசர் தலைமையில், ஆவடி மாநகராட்சிக்கு உட்பட்ட திருமுல்லைவாயல், வார்டு எண் 9ல் உள்ள தென்றல் நகரில், நேற்று துண்டு பிரசுரங்களை வழங்கி, திமுக அரசின் சாதனைகளை பொதுமக்களுக்கு எடுத்துரைக்கும் வகையில் திண்ணை பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது. இதில் ஆவடி மேயர் ஜி.உதயகுமார், தலைமை செயற்குழு உறுப்பினர் ரமேஷ், மண்டலத் தலைவர் அமுதா பேபி சேகர், மாநகர பொறுப்பாளர் சன் பிரகாஷ், ஆவடி கிழக்கு பகுதி செயலாளர் பேபி சேகர், மாமன்ற உறுப்பினர் ஜான், விமல், சக்திவேல், சுதாகரன், வெங்கடேசன், ஜான், செல்வம், வட்டச் செயலாளர்கள் ராஜி, பாண்டியன், டிசோசா, பிரபு வேல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

The post திண்ணை பிரசாரத்தில் இல்லம்தோறும் துண்டு பிரசுரம்: நாசர் எம்எல்ஏ வழங்கினார் appeared first on Dinakaran.

Tags : Nasser ,MLA ,Aavadi ,Nasser MLA ,DMK ,Stalin ,
× RELATED புத்தகங்கள் மனிதச் சமுதாயத்தைத்...