×

தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட 2,500 தெருக்களில் புதிய பெயர் பலகை:தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட 2,500 தெருக்களில் புதிய பெயர் பலகை

தாம்பரம்: தாம்பரம் மாநகராட்சி பகுதிகளில் ₹5.56 கோடி மதிப்பீட்டில் 2500 தெருகளில் புதிய தெரு பெயர் பலகைகள், 2300 தெருகளில் ஏற்கனவே உள்ள பெயர் பலகைகளில் ஒளிரும் ஸ்டிக்கர்கள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

இதுகுறித்து தாம்பரம் மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில், 15வது மத்திய நிதிக்குழு மான்ய திட்டத்தின் கீழ், புதிதாக தெரு பெயர் பலகைகள் அமைத்தல் மற்றும் ஏற்கனவே உள்ள பெயர் பலகைகளில் ஒளிரும் வகையிலான ஸ்டிக்கர்கள் அமைக்க திட்டமிடப்பட்டது.
அதன்படி தாம்பரம் மாநகராட்சி, 1வது மண்டலத்தில் உள்ள 600 தெருகளில் புதியதாக தெரு பெயர் பலகை, ஒளிரும் வகையிலான ஸ்டிக்கர்கள் நிறுவுதல் மற்றும் 500 தெருகளில் ஏற்கனவே உள்ள பெயர் பலகைகளில் ஒளிரும் வகையிலான ஸ்டிக்கர்கள் அமைத்தல் பணிகள் ₹1.32 கோடி மதிப்பீட்டிலும், 2வது மண்டலத்தில் உள்ள 400 தெருகளில் புதியதாக தெரு பெயர் பலகை, ஒளிரும் வகையிலான ஸ்டிக்கர்கள் நிறுவுதல் மற்றும் 400 தெருகளில் ஏற்கனவே உள்ள பெயர் பலகைகளில் ஒளிரும் வகையிலான ஸ்டிக்கர்கள் அமைத்தல் பணிகள் ₹90 லட்சத்திலும், 3வது மண்டலத்தில் உள்ள 500 தெருகளில் புதியதாக தெரு பெயர் பலகை, ஒளிரும் வகையிலான ஸ்டிக்கர்கள் நிறுவுதல் மற்றும் 400 தெருகளில் ஏற்கனவே உள்ள பெயர் பலகைகளில் ஒளிரும் வகையிலான ஸ்டிக்கர்கள் அமைத்தல் பணிகள் ₹1 கோடியே 9 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பீட்டிலும், 4வது மண்டலத்தில் உள்ள 600 தெருகளில் புதியதாக தெரு பெயர் பலகை, ஒளிரும் வகையிலான ஸ்டிக்கர்கள் நிறுவுதல் மற்றும் 600 தெருகளில் ஏற்கனவே உள்ள பெயர் பலகைகளில் ஒளிரும் வகையிலான ஸ்டிக்கர்கள் அமைத்தல் பணிகள் ₹1 கோடியே 34 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பீட்டிலும், 5வது மண்டலத்தில் உள்ள 400 தெருகளில் புதியதாக தெரு பெயர் பலகை, ஒளிரும் வகையிலான ஸ்டிக்கர்கள் நிறுவுதல் மற்றும் 400 தெருகளில் ஏற்கனவே உள்ள பெயர் பலகைகளில் ஒளிரும் வகையிலான ஸ்டிக்கர்கள் அமைத்தல் பணிகள் ₹90 லட்சம் மதிப்பீட்டிலும் என மொத்தம் ₹5 கோடியே 56 லட்சம் மதிப்பீட்டில் பணிகள் நடைபெற்று வருகிறது.

இதுபோன்ற தெருக்களின் பெயர் பலகைகள் மக்கள் அனைவரும் நகர பகுதிகளை அறிந்துகொள்ள உறுதுணையாக இருக்கும். மேலும், மக்கள் சரியான இடத்திற்குச் செல்லமுடிகிறது. இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட 2,500 தெருக்களில் புதிய பெயர் பலகை:தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட 2,500 தெருக்களில் புதிய பெயர் பலகை appeared first on Dinakaran.

Tags : Tambaram Corporation ,Tambaram ,Tambaram Municipal Corporation ,Dinakaran ,
× RELATED தாம்பரம் குப்பைக் கிடங்கில் தீ விபத்து..!!