×

உத்தப்புரம் கலவரத்தில் பாதித்த 302 பேருக்கு நிவாரணம் கோரி மனு

மதுரை, பிப்.27: கடந்த 2008ம் ஆண்டு மதுரை உத்தப்புரத்தில் நிகழ்ந்த கலவரத்தில் பாதிக்கப்பட்ட 302 நபர்களுக்கு ஐகோர்ட் உத்தரவுப்படி நிவாரணத் தொகை வழங்க கோரி கலெக்டரிடம் பாதிக்கப்பட்டவர்கள் மனு அளித்தனர். 2008ம் ஆண்டு அக்.1 மற்றும் 2 ஆகிய தேதிகளில் மதுரை மாவட்டம் உத்தப்புரத்தில் தீண்டாமை சுவர் தொடர்பாக இரு பிரிவினருக்கு இடையே மோதல் ஏற்பட்டது. கலவரத்தில் ஏராளமானவர்களின் வீடுகள், கால்நடைகள், வாகனங்கள் மற்றும் பொது மக்களுக்கு பாதிப்புகள் ஏற்பட்டன.

கலவரத்தில் பாதிக்கப்பட்ட 191 நபர்களுக்கு அரசு தரப்பில் நிவாரணங்கள் வழங்கப்பட்டுள்ள நிலையில் கலவரத்தில் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நிவாரணம் வழங்க வேண்டும் என 302 நபர்கள் சார்பில் சென்னை ஐகோர்ட் மதுரை கிளையில் வழக்கு தொடுத்திருந்தனர். பாதிக்கப்பட்ட 302 நபர்களுக்கும் உரிய நிவாரணம் வழங்கிட உத்தரவிடப்பட்டது. இதனையடுத்து பாதிக்கப்பட மக்கள் மதுரை மாவட்ட கலெக்டர் சங்கீதாவிடம் நேற்று கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர். அம்மனுவில், பாதிக்கப்பட்ட 302 நபர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என கோரப்பட்டிருந்தது.

The post உத்தப்புரம் கலவரத்தில் பாதித்த 302 பேருக்கு நிவாரணம் கோரி மனு appeared first on Dinakaran.

Tags : Uttapuram riots ,Madurai ,2008 Madurai Uttapurat riots ,ICOURD ,Uttapuram Riot ,Dinakaran ,
× RELATED மதுரை சித்திரைத் திருவிழா: போலீசாரின்...