×

மீனாட்சியம்மன் கோயிலில் தெப்பக்குளத்தை பராமரிக்க மனு

மதுரை, பிப்.27: மீனாட்சியம்மன் கோயில் தெப்பக்குளத்தை பராமரிக்க அனுமதி கேட்டு மதுரை இயக்கத்தினர் கோயில் சேர்மன் ருக்மணி பழனிவேல்ராஜனிடம் மனு அளித்தனர். அந்த மனுவில், ‘‘மதுரையர் இயக்கத்தின் நோக்கம் மதுரை சுற்றுலாத்தலமாக மாற்றப்பட வேண்டும். மதுரை மாவட்ட சுற்றுலாத் துறையுடன் இணைந்து வெளிநாட்டவர்களுடன் பொங்கல் விழா சிறப்பிக்கப்பட்டது. சமணர் படுகை மற்றும் திடியன் திருக்கோவில் சுத்தம் செய்து மராமத்து பணிக்காக ஒன்றிய, மாநில அரசுகள் அனுமதி பெற கோரி இருக்கிறோம்.

மேலும் தெப்பக்குளம் சுற்றிலும் விளக்குகள் அமைப்பதற்காக முயற்சிக்கப்பட்டு, மதுரை சு.வெங்கடேசன் எம்.பி நிதியிலிருந்து விளக்குகள் அமைப்பட்டது. அதேபோல் மீனாட்சியம்மன் கோயில் அதன் கட்டுப்பாடு இருக்கின்ற அனைத்து கோயில்களுக்கும் இயக்கத்தின் சார்பாக இணைந்து செயல்பட்டு பராமரிக்க திட்டமிட்டு இருக்கிறோம். எனவே, அதற்கு கோயில் நிர்வாகம் அனுமதிக்க வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளனர். மனுவை பெற்ற ருக்மணி பழனிவேல்ராஜன் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி விட்டு, உரிய அனுமதி வழங்கப்படும் என தெரிவித்தார்.

The post மீனாட்சியம்மன் கோயிலில் தெப்பக்குளத்தை பராமரிக்க மனு appeared first on Dinakaran.

Tags : Theppakulam ,Meenakshiyamman ,Madurai ,Rukmani Palanivelrajan ,Madurai movement ,Madurai District Tourism Department ,Meenakshiyamman Temple ,
× RELATED மதுரையில் மீனாட்சியம்மன்...