×

பஸ் ஸ்டாண்டில் கழிப்பிடம் சீரமைப்பு

பாலக்கோடு: பாலக்கோடு பஸ் நிலையத்தில் உள்ள கட்டண கழிவறை பழுதடைந்து காணப்பட்ட நிலையில், அதனை சீரமைக்கும் பணிகளை மேற்கொள்ள பேரூராட்சி மன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதை தொடர்ந்து, பேரூராட்சி சார்பில் ₹5 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து கழிவறை சீரமைக்கும் பணிகளை பாலக்கோடு பேரூராட்சி தலைவர் முரளி பூமிபூஜை செய்து தொடங்கி வைத்தார். பேருராட்சி துணை தலைவர் தாஹசீனா இதயாத்துல்லா முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் கவுன்சிலர்கள் ஜெயந்தி மோகன், சிவசங்கரி ரவி, சரவணன், கிளைசெயலாளர் கணேசன், கார்மெண்ட்ஸ் சக்திவேல், சின்னசாமி, தளபதி, ஒப்பந்ததாரர் இளம்சூரியன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

The post பஸ் ஸ்டாண்டில் கழிப்பிடம் சீரமைப்பு appeared first on Dinakaran.

Tags : Palakodu ,Dinakaran ,
× RELATED பாலக்கோடு அருகே வாகன சோதனையில் ₹95 ஆயிரம் பறிமுதல்