×

அத்மா திட்டத்தின் மூலம் விவசாயிகளுக்கு ஒழுங்குமுறை விற்பனை, தேசிய மின்னணு வேளாண்மை சந்தை பயிற்சி

 

திருவள்ளூர்: வேளாண்மை துறை சார்பில் அத்மா திட்டத்தின் மூலம் விவசாயிகளுக்கு ஒழுங்குமுறை விற்பனை மற்றும் தேசிய மின்னனு வேளாண்மை சந்தை பயிற்சி முகாம் நடத்தப்பட்டது. திருவள்ளூர் வட்டாரம், பேரதூர் கிராமத்தில் வேளாண்மைத் துறையில் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை விரிவாக்க சீரமைப்பு திட்டம் 2023 – 24 திட்டத்தின் மூலம் ஒழுங்குமுறை விற்பனை சந்தை மற்றும் தேசிய மின்னனு வேளாண்மை சந்தை குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி முகாம் நடந்தது.

இந்த பயிற்சியில், திருவள்ளூர் மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் க.முருகன் தலைமை தாங்கினார். அப்போது அவர் பேசியதாவது: தேசிய மின்னனு வேளாண்மை சந்தை மூலம் விவசாயிகளே வலை தளத்தில் பதிவு செய்யும் செயல்முறை விளக்கம், நேரடி சந்தைபடுத்துதல், வேளாண் விளைபொருட்களுக்கு நல்ல விலைக்கு கிடைக்க பெறுதல், இடை தரகரின்றி விற்பனை செய்வதோடு மட்டுமின்றி பணம் நேரடி வங்கி கணக்கிற்கு வரவு வைக்கப்படுகிறது என்பதை பற்றி எடுத்துரைத்தார்.

இதனைத் தொடர்ந்து மாவட்ட வேளாண்மை துணை இயக்குநர் (பொ) ரமேஷ் பேசும் போது, நூண்ணுயிர் பாசனத் திட்டதின் பயன்பாடு, நீர்மேலாண்மை, நீர் பயன்பாடு மற்றும் துறை மூலம் திட்டத்தின் பயன்பெறுதல் குறித்து விவசாயிகளுக்கு எடுத்துரைத்தார். அடுத்து, வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் ஸ்ரீசங்கரி பேசும்போது, வேளாண்மை துறையில் வழங்கப்படும் உயிர் உரங்கள், நுண்ணூட்ட கலவை போன்றவை பயன்படுத்தும் முறை அதன் முக்கியத்துவம் குறித்து விளக்கவுரையாற்றினார்.

பிறகு வேளாண் விற்பனை வணிகத்துறை வேளாண்மை அலுவலர் முபாரக் தனது உரையில், ஒழுங்குமுறை விற்பனை சந்தையில் விவசாயிகள் விற்பனையை எளிமையாக்கவும், விவசாயிகளுக்கு விரைந்து பணப்பட்டுவாடா செய்ய உதவுவதோடு, விளை பொருட்கள் குறைந்த கட்டணத்தில் இருப்பு வைக்க கிடங்கு வசதி, பொருளீட்டும் வசதி மற்றும் இடைதரகர் இன்றி செய்வதற்கான வழிமுறைகள் மற்றும் அதன் பயங்களிப்பு பற்றி எடுத்துரைத்தார். இந்த நிகழ்ச்சியில், லேளாண்மை அலுவலர் சுபாஸ்ரீ, பேரத்தூர் ஊராட்சி தலைவர் ஜி.பிரபா, துணைத் தலைவர் மோகன், உதவி வேளாண்மை அலுவலர்கள் ஆத்ம செந்தில், சாமுண்டீஸ்வரி, நிர்மலா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

The post அத்மா திட்டத்தின் மூலம் விவசாயிகளுக்கு ஒழுங்குமுறை விற்பனை, தேசிய மின்னணு வேளாண்மை சந்தை பயிற்சி appeared first on Dinakaran.

Tags : Atma ,Tiruvallur ,National Electronic Agricultural Market ,Department of Agriculture ,Agriculture Technology Management Agency ,Peradur Village, ,Tiruvallur District ,National Electronic Agriculture Market ,Dinakaran ,
× RELATED வாக்கு எண்ணிக்கை மையத்தில் கலெக்டர் ஆய்வு