×

பிரதமர் மோடி நாளை தமிழகம் வருவதையொட்டி காலைமுதல் மாலை வரை கோவை மாவட்டத்தில் போக்குவரத்து மாற்றம்: கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர்


கோவை: நாளை 27.02.2024-ம் தேதி அன்று இந்திய பிரதமர் அவர்கள் கோவை சூலூர் மற்றும் பல்லடம் வருவதையொட்டி காலை 06.00 மணி முதல் மாலை வரை கனரக வாகனங்களுக்கு மட்டும் கீழ்கண்டவாறு போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது என கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் தெரிவித்துள்ளார்.

* பாலக்காட்டிலிருந்து வாளையார் வழியாக வரும் தாராபுரம், திருச்சி செல்ல வேண்டிய கனரக வாகனங்கள் மதுக்கரை, கற்பகம் சுல்லூரி சந்திப்பு, கிணத்துக்கடவு, பொள்ளாச்சி, உடுமலைப்பேட்டை, தாராபுரம் வழியே செல்ல வேண்டும்.

* கோவை மாநகருக்குள் இருந்து வரும் கனரக வாகனங்கள் சுங்கம் வழியாக பொள்ளாச்சி சாலை, ஈச்சனாரி, கற்பகம் கல்லூரி சந்திப்பு. கிணத்துக்கடவு, பொள்ளாச்சி, உடுமலைப்பேட்டை, தாராபுரம் வழியே செல்ல வேண்டும்.

* கோவை மாநகர் சிங்காநல்லூரில் இருந்து திருச்சி சாலையில் வரும் கனரக வாகனங்கள் சிந்தாமணிபுதூர் நான்கு ரோடு சந்திப்பு, L&T Bye-pass, பட்டணம் பிரிவு, G-Square, கற்பகம் கல்லூரி சந்திப்பு, கிணத்துக்கடவு, பொள்ளாச்சி, உடுமலைப்பேட்டை, தாராபுரம் வழியே செல்ல வேண்டும். அல்லது.

* கோவை சிங்காநல்லூரில் இருந்து திருச்சி சாலையில் வரும் கனரக வாகனங்கள் சிந்தாமணிபுதூர் நான்கு ரோடு சந்திப்பு, நீலாம்பூர், அவினாசி சாலை, கருமத்தம்பட்டி, அவினாசி வழியே செல்ல வேண்டும்.

* பொள்ளாச்சியில் இருந்து பல்லடம் செல்லும் கனரக வாகனங்கள் உடுமலைப்பேட்டை தாராபுரம் வழியே செல்ல வேண்டும். கருமத்தம்பட்டியில் இருந்து வரும் கனரசு வாகனங்கள் சூலூர் வழியில் செல்வதற்கு அனுமதி இல்லை. நீலாம்பூர், சிந்தாமணிபுதூர் சந்திப்பு, கற்பகம் கல்லூரி சந்திப்பு, பொள்ளாச்சி வழியே செல்ல அனுமதிக்கப்படும்.

The post பிரதமர் மோடி நாளை தமிழகம் வருவதையொட்டி காலைமுதல் மாலை வரை கோவை மாவட்டத்தில் போக்குவரத்து மாற்றம்: கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் appeared first on Dinakaran.

Tags : Goa district ,PM Modi ,Tamil Nadu ,Goa District Police Superintendent ,Goa ,Prime Minister of India ,Goa Sulur ,Palladam ,Goa District Police ,Superintendent ,
× RELATED தமிழ்நாடு முழுவதும் பாஜக அலை...