×

சமூக வலைத்தளங்கள் மூலம் அவதூறு பரப்பியதாக திருப்பதி கோயில் கெளரவ தலைமை அர்ச்சகர் பணி நீக்கம்: தேவஸ்தானம் உத்தரவு


திருமலை: சமூக வலைத்தளங்கள் மூலம் அவதூறு பரப்பியதாக திருப்பதி ஏழுமலையான் கோயில் கெளரவ தலைமை அர்ச்சகர் ரமண தீட்சதலுவை பணி நீக்கம் செய்து தேவஸ்தான அறங்காவலர் குழு அதிரடி முடிவு எடுத்துள்ளது. தேவஸ்தான நிர்வாகம் தேவஸ்தான நிர்வாக அதிகாரி தர்மா ரெட்டி அர்ச்சகர்கள் மீது பல்வேறு குற்றசாட்டுகளை சுமத்தி வீடியோ வெளியிட்ட நிலையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ரமண தீட்சதலு மீது திருமலை காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில் பணி நீக்கம் செய்துள்ளனர்.

இவர் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு ஓய்வு பெற்றார். ஓய்வு பெற்ற பிறகு மீண்டும் அவருக்கு கெளரவ தலைமை அர்ச்சகர் பணி கொடுக்கப்பட்டு பதவியில் அமர்ந்தார். இதற்கிடையில் 3 ஆண்டுகளுக்கு முன்பு தேவஸ்தானம் குறித்து பல அவதூறு கிளப்பியதாக அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. மீண்டும் அவரை பணியில் சேர்க்கப்பட்டுள்ளது.

மேலும் அவர் தலைமை கெளரவ அர்ச்சகராக பணியாற்றி வருகிறார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு எக்ஸ் தளத்தில் தேவஸ்தானம் குறித்தும் கோயில் நிர்வாக அதிகாரிகள் குறித்தும், கோயில் ஊழியர்கள் குறித்தும் லட்டு செய்யும் இடத்தில் பல்வேறு முறைகேடுகள் நடந்திருப்பதாகவும் அவதூறுகளை கூறி வந்தார்.

இந்நிலையில் அவரை விசாரணை நடத்தியபோது அவர் நான் எதுவும் சொல்லவில்லை இது என்னுடைய பேச்சு இல்லை என்னுடைய குரல் இல்லை என்றும் மறுப்பு தெரிவித்துள்ளார். இந்நிலையில் இன்று நடைபெற்ற அறங்காவலர் கூட்டத்தில் ரமண தீட்சதலுவை உடனடியாக பணி நீக்கம் செய்ய தேவஸ்தானம் அறங்காவலர் குழு உத்தரவு அளித்துள்ளது

The post சமூக வலைத்தளங்கள் மூலம் அவதூறு பரப்பியதாக திருப்பதி கோயில் கெளரவ தலைமை அர்ச்சகர் பணி நீக்கம்: தேவஸ்தானம் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Tirupathi Temple ,Archdeacon ,Devastanam ,Thirumalai ,Devastana Trustee Committee ,Tirupathi Elemalayan Temple ,Archagar Ramana Ditchtalua ,Devastana Administration ,Devastana ,Executive Officer ,Dharma Reddy ,Chief Archbishop ,
× RELATED திருப்பதி கோயிலில் வசந்த உற்சவம்...