×

கறம்பக்குடி அருகே கிணற்றில் விழுந்த ஆடு உயிருடன் மீட்பு

கறம்பக்குடி: கறம்பக்குடி அருகே கிணற்றில் விழுந்த ஆட்டை தீயணைப்பு வீரர்கள் பத்திரமாக மீட்டனர். புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே ஆலங்குடி தீயணைப்பு நிலையத்திற்கு உட்பட்ட பாச்சிகோட்டை கிராமத்தில் உள்ள உடையார் தெருவை சேர்ந்தவர் அஞ்சம்மாள். இவரது ஆடு கிணற்றில் விழுந்து விட்டதாக கறம்பக்குடி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு நிலைய அலுவலர் கார்த்திகேயன் தலைமை யில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று கிணற்றுக்குள் விழுந்த ஆட்டை உயிருடன் மீட்டு உரிமையாளரிடம் ஒப்படைத்தனர். ஆட்டை மீட்ட தீயணைப்பு துறையினரை பொது மக்கள் பாராட்டினர்.

The post கறம்பக்குடி அருகே கிணற்றில் விழுந்த ஆடு உயிருடன் மீட்பு appeared first on Dinakaran.

Tags : Karambakudi ,Anjammal ,Udaiar Street ,Bachikottai ,Alangudi Fire Station ,Pudukkottai District Karambakudi ,Dinakaran ,
× RELATED கறம்பக்குடி அருகே தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனை