×

அரவக்குறிச்சி அருகே கால்நடை தீவனப்புல் வளர்ந்துள்ள காடுகளில் தீ கடவூர் அருகே புதுமடைப்புதூரில் சிறப்பு கால்நடை சிகிச்சை விழிப்புணர்வு முகாம் தீவனப்பயிர் சாகுபடி தொழில்நுட்ப விளக்கம்

தோகைமலை: கடவூர் அருகே தே.இடையபட்டி புதுமடைப்புதூரில் நடந்த சிறப்பு கால்நடை மலடு நீக்கம் சிகிச்சை மற்றும் விழிப்புணர்வு முகாமில் தீவன பயிர் சாகுபடி மற்றும் கலப்பு தீவனம் தயா ரிக்கும் தொழில் நுட்பங்கள் அளிக்கப்பட்டது. கரூர் மாவட்டம் கடவூர் வட்டார பகுதிகளில் தமிழ்நாடு அரசு வழிகாட்டுதல் படி மாவட்ட கலெக்டர் தங்கவேல் உத்தரவை அடுத்து கால்நடை பராமரிப்புத்துறை சார்பாக, சிறப்பு கால்நடை மலடு நீக்கம் சிகிச்சை மற்றும் விழிப்புணர்வு முகாம் நடந்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக மண்டல இணை இயக்குநர் சாந்தி, துணை இயக்குநர் பாஸ்கர், உதவி இயக்குநர் முரளிதரன் ஆகியோர் மேற்பார்வையில் கடவூர் அருகே தே.இடையப்பட்டி பகுதியில் உள்ள புதுமடைப்புதூரில் சிறப்பு கால்நடை மலடு நீக்கம் சிகிச்சை மற்றும் விழிப்புணர்வு முகாம் நடந்தது. முகாமிற்கு கடவூர் ஊராட்சி மன்ற தலைவர் செல்லமுத்து தலைமை வகித்தார். கால்நடை உதவி மருத்துவர்கள் கன்னியப்பன், சுதா, பிரேம்குமார், செந்தில், மணிகண்டன், ரேணுகாதேவி, கோமத்தீஸ்வரி ஆகியோர் கலந்து கொண்டு சிகிச்சைகள் வழங்கி விழிப்புணர்வுகள் ஏற்படுத்தினர்.

The post அரவக்குறிச்சி அருகே கால்நடை தீவனப்புல் வளர்ந்துள்ள காடுகளில் தீ கடவூர் அருகே புதுமடைப்புதூரில் சிறப்பு கால்நடை சிகிச்சை விழிப்புணர்வு முகாம் தீவனப்பயிர் சாகுபடி தொழில்நுட்ப விளக்கம் appeared first on Dinakaran.

Tags : Special Veterinary Therapy Awareness Camp ,Pudumatripudur ,Kadavur ,Aravakurichi ,Daya Rikum ,Livestock Sterilization Treatment and ,Camp ,Intermediate- ,Pudupattia ,Karur District Kadavur ,Special Veterinary Treatment Awareness Camp ,Novudamadiputur ,Arawakurichi ,Dinakaran ,
× RELATED கடவூர், தோகைமலை பகுதியில்...