×

100 ஏக்கர் எரிந்து நாசம், விவசாயிகள் கவலை

அரவக்குறிச்சி: அரவக்குறிச்சி அருகே கால்நடை தீவனப் புல் வளர்ந்துள்ள காடுகளில் திடீரென தீ பிடித்ததில் நூறு ஏக்கருக்கு மேல் வளர்ந்திருந்த தீவன புட்கள் எரிந்து நாசமாயின. அரவக்குறிச்சி ஒன்றியம்லிங்காயக்கன்பட்டி உராட்சி பகுதியில் ஏராளமான விவசாயிகள் விவசாயத்திற்கு மாற்றாக தங்கள் தோட்டங்களில் ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகள் வளர்த்து, அதனை விற்று வரும் வருமானத்தில் ஈடுகட்டி பிழைப்பு நடத்தி வருகின்றனர். கால்நடைகளுக்காக தங்கள் தோட்டங்களில் கொளுக்கட்டை புல் என்னும் கால்களை தீவனப்புப் புல் வளர்த்து வருகின்றனர். இந்நிலையில் பங்கார்பாடி பகுதியிலுள்ள ஒரு தோட்டத்தில் உள்ள புட்களில் தீப்பிடித்தது. வெயிலில் காய்ந்து கிடந்த புட்களில் தீ மள மளவென பரவி அடுத்தடுத்த தோட்டங்களில் வளர்ந்த புட்களிலும் தீப்பிடித்து புட்கள் எரிந்து சாம்பலாகியது. இதில் 100 ஏக்கருக்கும் மேல் கால்நடை தீவனப் புட்கள் தீப்பிடித்து எரிந்து விட்டதாக விவசாயிகள் கவலையுடன் கூறினர்.

The post 100 ஏக்கர் எரிந்து நாசம், விவசாயிகள் கவலை appeared first on Dinakaran.

Tags : Aravakurichi ,Aravakurichi Union Lingayakanpatti Uratchi ,Dinakaran ,
× RELATED பூக்களும், காய்களும் அதிகமாக பருத்தி...