×

சாக்கடை கால்வாய் சுத்தம் செய்ய கூடுதல் பணியாளர்கள்

 

கோவை, பிப். 25: கோவை மாநகராட்சி பட்ஜெட் சம்பந்தமான கூட்டம், மாநகராட்சி பிரதான அலுவலக வளாகத்தில் உள்ள கூட்டரங்கில் நேற்று நடந்தது. மேயர் கல்பனா ஆனந்தகுமார் தலைமை தாங்கினார். மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன், துணைமேயர் வெற்றிசெல்வன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், மாமன்ற அனைத்து கட்சி குழு தலைவர்கள், நிலைக்குழு தலைவர்கள் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகளிடம் கருத்து கேட்கப்பட்டது.

இக்கூட்டத்தில், 26-வது வார்டு கவுன்சிலர் சித்ரா வெள்ளிங்கிரி (மதிமுக), மேயரிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: கோவை மாநகராட்சியில் தற்போது குப்பை அகற்றுவதற்கும், சாக்கடை கால்வாய் சுத்தம் செய்வதற்கும் போதுமான ஆட்கள் இல்லை. இதனால், சாக்கடை கால்வாயில் ஆங்காங்கே அடைப்பு ஏற்பட்டு, நீர் தேங்கி, கொசு புழுக்கள் உற்பத்தியாகிறது. இதனால், டெங்கு, மேலேரியா உள்ளிட்ட நோய்கள் பரவுகின்றன. எனவே, சாக்கடை கால்வாய் சுத்தம் செய்யும் பணிகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும்.

போதுமான பணியாளர்களை நியமிக்க வேண்டும். மாநகர் முழுவதும், மாநகராட்சி பூங்காக்களில், குழந்தைகள் விளையாடும் பொருட்கள் மற்றும் உடற்பயிற்சி சாதனங்கள் சேதம் அடைந்து, பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளன. இவற்றை சீர்படுத்த வேண்டும். கவுன்சிலர்களின் வார்டு மேம்பாட்டு நிதி ரூ.50 லட்சத்தில் இருந்து 2 கோடியாக உயர்த்தி வழங்கவேண்டும். மாநகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்க, திட்டச்சாலை பணிகளை விரைந்து முடித்து, மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியுள்ளார்.

The post சாக்கடை கால்வாய் சுத்தம் செய்ய கூடுதல் பணியாளர்கள் appeared first on Dinakaran.

Tags : Coimbatore ,Coimbatore Corporation ,Mayor ,Kalpana Anandakumar ,Commissioner ,Sivaguru Prabhakaran ,Deputy ,Vethiselvan ,Dinakaran ,
× RELATED சென்னை, கோவை மாநகராட்சி டெண்டர்...