×

மாட்டு கொட்டகையில் 6 மாத குழந்தை சடலம்: போலீசார் விசாரணை

திருவொற்றியூர்: மாதவரம் பால்பண்ணையில் மாட்டு கொட்டகையில் 6 மாத ஆண் குழந்தை சடலம் மீட்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மாதவரம் பால்பண்ணை பகுதியில் பொற்றும் எனப்படும் மாடுகள் வளர்க்கும் பண்ணை கொட்டகைகள் உள்ளது. இங்கு ஏராளமானோர் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று இங்குள்ள 8வது யூனிட் அருகே உள்ள மாட்டு கொட்டகையில், குறை பிரசவத்தில் பிறந்த 6 மாத ஆண் குழந்தை ஒன்று இறந்து கிடந்தது. இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் பால்பண்ணை காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று குழந்தையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் குழந்தையை கொட்டகையில் வீசி சென்றது யார், இறந்த குழந்தையை இங்கு வந்து வீசிவிட்டு சென்றார்களா என விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post மாட்டு கொட்டகையில் 6 மாத குழந்தை சடலம்: போலீசார் விசாரணை appeared first on Dinakaran.

Tags : Tiruvottiyur ,Madhavaram Dairy ,Madhavaram ,Pottum ,Dinakaran ,
× RELATED 3 பெட்டிகள் கொண்ட 138 ஓட்டுநர் இல்லா...