×

மெட்ரோ ரயில் கண்ணாடிகள் உடைந்து 4 பயணிகள் காயம்

அண்ணாநகர்: கோயம்பேடு மெட்ரோ ரயிலில் கண்ணாடி உடைந்து 4 பயணிகள் காயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. சென்னை விமான நிலையத்தில் இருந்து சென்ட்ரல் வரை செல்லும் மெட்ரோ ரயில், நேற்று முன்தினம் இரவு அரும்பாக்கம் ரயில் நிலையத்தில் பயணிகளை இறக்கிவிட்டு, மீண்டும் கோயம்பேடு மெட்ரோ ரயில் நிலையத்திற்கு வந்தது. அப்போது, ரயில் ஓட்டுநர் திடீரென பிரேக் பிடித்ததால், மெட்ரோ ரயிலின் கண்ணாடி உடைந்து சிதறியதில் 4 பயணிகள் காயமடைந்தனர். இதனைகண்டு சக பயணிகள் அலறி கூச்சலிட்டதால் மெட்ரோ ரயில் உடனடியாக நிறுத்தப்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கோயம்பேடு போலீசார், காயமடைந்த 4 பயணிகளை மீட்டு, சிகிச்சைக்காக வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு, அவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து, போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால், கோயம்பேடு மெட்ரோ ரயில் நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

The post மெட்ரோ ரயில் கண்ணாடிகள் உடைந்து 4 பயணிகள் காயம் appeared first on Dinakaran.

Tags : Annanagar ,Koyambedu ,Chennai Airport ,Central ,Arumbakkam railway ,
× RELATED விசேஷ நாட்கள், முகூர்த்த நாட்கள்...