×

பூவை ஜெகன்மூர்த்தி எம்எல்ஏ முன்னிலையில் புரட்சி பாரதம் கட்சியில் 200 பெண்கள் இணைந்தனர்

 

திருவள்ளூர்: புரட்சி பாரதம் கட்சி தலைவர் பூவை எம்.ஜெகன் மூர்த்தி எம்எல்ஏ முன்னிலையில் ஆவடி, கோயில்பதாகையைச் சேர்ந்த வழக்கறிஞர் தேவி சுரேஷ்குமார் தலைமையில் 200 க்கும் மேற்பட்ட மகளிர் தங்களை புரட்சி பாரதம் கட்சியில் இணைத்துக் கொண்டனர். இந்த நிகழ்ச்சியின் போது மாநில துணைப் பொது செயலாளர் பா.காமராஜ், மாநில சிறுபான்மை பிரிவு தலைவர் பி.தாமஸ் பர்ணபாஸ், மாநில செயலாளர் தளபதி செல்வம், மாவட்ட செயலாளர் கூடப்பாக்கம் இ.குட்டி, மாவட்டத் தலைவர் பிரீஸ் பன்னீர், மாநில நிர்வாகிகள் உமாதேவி, ஸ்டெல்லா, கே.எஸ்.ரகுநாத்,

பூந்தமல்லி ஒன்றிய தலைவர் ஏ.கே.சிவராமன், அப்பு என்கிற ஜெயக்குமார், ஆவடி நகர தலைவர் ராஜசேகர், நகர செயலாளர் ரஜினி, பொருளாளர் சரவணன, இணை செயலாளர் நித்யா, அபிராமி, தெய்வானை, மஞ்சு, உள்பட பலர் உடன் இருந்தனர். இதனைத் தொடர்ந்து திருவள்ளூர் மத்திய மாவட்ட மகளிர் அணி தலைவராக வழக்கறிஞர் தேவி சுரேஷ்குமாரை நியமனம் செய்து அதற்கான ஆணையினை புரட்சி பாரதம் கட்சியின் தலைவர் பூவை எம்.ஜெகன்மூர்த்தி எம்எல்ஏ வழங்கினார்.

The post பூவை ஜெகன்மூர்த்தி எம்எல்ஏ முன்னிலையில் புரட்சி பாரதம் கட்சியில் 200 பெண்கள் இணைந்தனர் appeared first on Dinakaran.

Tags : Pratchii Bharatham Party ,Poovai Jaganmurthy ,MLA ,Thiruvallur ,Pradachi Bharatham Party ,Puvai ,M. Jagan Murthy ,Devi Sureshkumar ,Koilpatagai ,Pratachi Bharatham Party ,Dinakaran ,
× RELATED கடந்த 10 ஆண்டுகளாக ஏன் முயற்சி...