×

மதுராந்தகம் நகர அதிமுக சார்பில் ஜெயலலிதா பிறந்தநாள் விழா: எம்எல்ஏ பங்கேற்பு

 

மதுராந்தகம்: மதுராந்தகம் நகர அதிமுக சார்பில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா பிறந்தநாள் விழாவில் எம்எல்ஏ மரகதம் குமரவேல் மாலை அணிவித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார். செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் நகர அதிமுக சார்பில் மறைந்த அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா பிறந்தநாள் விழா மதுராந்தகம் பேருந்து நிலையம், எம்ஜிஆர் சிலை அருகில் நேற்று நடைபெற்றது. இதில் மதுராந்தகம் எம்எல்ஏ மரகதம் குமரவேல் கலந்துகொண்டு எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து, ஜெயலலிதாவின் திருவுருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் செங்கல்பட்டு கிழக்கு மாவட்டச் செயலாளர் திருக்கழுக்குன்றம் எஸ்.ஆறுமுகம், மாவட்ட அம்மா பேரவைச் செயலாளர் ஆனூர் பக்தாசலம், நகர செயலாளர் சரவணன், மதுராந்தகம் ஒன்றியக்குழு பெருந்தலைவர் கீதா கார்த்திகேயன், மதுராந்தகம் ஒன்றியக்குழு துணைத் தலைவர் குமரவேல், மதுராந்தகம் தெற்கு ஒன்றியச் செயலாளர் முதுகரை கார்த்திகேயன், மதுராந்தகம் வடக்கு ஒன்றியச் செயலாளர் குமரன், நகர அம்மா பேரவைச் செயலாளர் வழக்கறிஞர் சீனிவாசன், கருங்குழி பேரூர் செயலாளர் ஜெயராஜ், உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

The post மதுராந்தகம் நகர அதிமுக சார்பில் ஜெயலலிதா பிறந்தநாள் விழா: எம்எல்ஏ பங்கேற்பு appeared first on Dinakaran.

Tags : Jayalalithaa ,AIADMK ,Madurathangam ,MLA ,Madhurandakam ,Marakatham Kumaravel ,Maduraandakam ,Chief Minister ,general secretary ,Chengalpattu district ,Madhurantagam city ,Madurantagam city ,Dinakaran ,
× RELATED எடப்பாடி கொடுத்த ‘சீக்ரெட் சிக்னல்’...