×

குஜராத்தில் காங்.24, ஆம் ஆத்மிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு: மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ்-ஆம் ஆத்மி இடையே 5 மாநிலங்களில் தொகுதி உடன்பாடு..!!

டெல்லி: உத்தரப்பிரதேசத்தில் காங் – சமாஜ்வாதி இடையே உடன்பாடு ஏற்பட்ட நிலையில் 5 மாநிலங்களில் காங்கிரஸ் ஆம் ஆத்மி இடையே உடன்பாடு ஏற்பட்டுள்ளது. குஜராத், ஹரியானா, டெல்லி, கோவா மற்றும் சண்டிகர், ஆகிய மாநிலங்களில் மக்களவை தேர்தலுக்கான தொகுதி பங்கீட்டை ஆம் ஆத்மி மற்றும் காங்கிரஸ் கட்சி முடித்துள்ளது. டெல்லியில் உள்ள 7 தொகுதிகளில் 4 தொகுதிகள் ஆம் ஆத்மிக்கும் 3 தொகுதி காங்கிரசுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது.

குஜராத்தில் 24 தொகுதிகள் காங்கிரசுக்கும் 2 தொகுதிகள் ஆம் ஆத்மிக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது. ஹரியானாவில் மொத்தமுள்ள 10 தொகுதிகளில் காங்கிரஸ் 9, ஆம் ஆத்மி ஒரு தொகுதியில் களம் காண்கின்றன. சண்டிகரை பொறுத்தவரையில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் போட்டியிடுவார் என்ற உடன்படும் எட்டப்பட்டுள்ளது. கோவாவின் 2 தொகுதிகளிலும் காங்கிரஸ் கட்சி போட்டியிடும் என்ற தகவல் அதிகாரபூர்வமாக அறிவிப்பில் காங்கிரஸ் மூத்த தலைவர் மற்றும் ஆம் ஆத்மி கட்சியினுடைய அமைச்சர்கள் டெல்லியில் அறிவிப்பை வெளியிட்டனர். அதிகாரபூர்வமான அறிவிப்பு என்பது கடந்த 3 கட்ட பேச்சு வார்த்தைக்கு பிறகு இன்று ஆம் ஆத்மி மற்றும் காங்கிரஸ் கட்சியால் வெளியிடப்பட்டுள்ளது.

The post குஜராத்தில் காங்.24, ஆம் ஆத்மிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு: மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ்-ஆம் ஆத்மி இடையே 5 மாநிலங்களில் தொகுதி உடன்பாடு..!! appeared first on Dinakaran.

Tags : Gujarat ,Congress ,Aam Atmi ,Delhi ,Atmi ,Samajwadi ,Uttar Pradesh ,Haryana ,Goa ,Chandigarh ,Lok Sabha ,Aam ,MLA ,
× RELATED முன்மொழிந்தவர்களின் கையெழுத்தில்...