×

நெம்மேலியில் ரூ.2,465 கோடி மதிப்பிலான கடல்நீரை குடிநீராக்கும் நிலையத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!!

தஞ்சாவூர்: நெம்மேலியில் ரூ.2,465 கோடி மதிப்பிலான கடல்நீரை குடிநீராக்கும் நிலையத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். சென்னை நகரின் குடிநீர் பிரச்சினையை தீர்க்க 2003ம் ஆண்டு நெம்மேலி மற்றும் மீஞ்சூரை அடுத்த காட்டுப்பள்ளியில் தினமும் தலா 100 மில்லியன் லிட்டர் கொள்ளளவு திறன் கொண்ட கடல்நீரை குடிநீராக்கும் நிலையங்கள் அமைக்கப்பட்டு பயன்பாட்டில் இருந்து வருகிறது.

இந்த 2 சுத்திகரிப்பு நிலையங்களில் இருந்து பெறப்படும் குடிநீர் சென்னையின் மொத்த குடிநீர் தேவையில் 30 சதவீதத்தை பூர்த்தி செய்து வருகிறது. இதனால் நெம்மேலியில் கூடுதலாக ரூ.1516.82 கோடி செலவில் 2-வது சுத்திகரிப்பு ஆலை அமைக்கும் பணி கடந்த 2019ம் ஆண்டு முதல் நடைபெற்று வந்தது. தினமும் 15 கோடி லிட்டர் திறன் உடைய சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதற்காக மிகப்பெரிய குழாய்கள் அங்கு பதிக்கப்பட்டு வந்தது.

இது மட்டுமின்றி சோழிங்கநல்லூரில் பெரிய அளவில் கீழ்நிலை நீர்த்தேக்கம் மற்றும் 48 கி.மீ. தூரம் வரை குழாய்கள் பதிக்கும் பணியும் நடைபெற்று வந்தன. இந்நிலையில் அனைத்து பணிகளும் முடிந்து 4 மாதங்களுக்கு முன்பு பரீட்சார்த்த முறையில் சோதனை ஓட்டமும் தொடங்கியது. சோழிங்கநல்லூர், உள்ள கரம், ஆலந்தூர், பரங்கிமலை, மேடவாக்கம், கோவிலம்பாக்கம், நன்மங்கலம், கீழ்க்கட்டளை, மூவரசம்பேட்டை, பல்லாவரம் ஆகிய பகுதிகளுக்கு அனுப்பி வைத்து பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வந்தது.

இந்த பணிகள் அனைத்தும் இறுதிக்கட்டத்துக்கு வந்ததால் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, குறு,ம் சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் மற்றும் உயர் அதிகாரிகள் நெம்மேலிக்கு நேற்று நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர். இந்நிலையில் நெம்மேலியில் இன்று ரூ.2,465 கோடி மதிப்பிலான கடல்நீரை குடிநீராக்கும் நிலையத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். ஆலையின் மூலம் சோழிங்கநல்லூர், வேளச்சேரி, மடிப்பாக்கம் பகுதிகளில் 9 லட்சம் மக்கள் பயன்பெறுவர். 95 முடிவுற்ற திட்ட பணிகளை தொடங்கி வைத்து , ரூ.2,058 கோடியில் 40 புதிய திட்டப் பணிகளுக்கும் முதல்வர் அடிக்கல் நாட்டினார்.

The post நெம்மேலியில் ரூ.2,465 கோடி மதிப்பிலான கடல்நீரை குடிநீராக்கும் நிலையத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!! appeared first on Dinakaran.

Tags : CM ,Uddhav Thackeray ,Nemmeli ,K. Stalin ,Thanjavur ,Chief Minister ,MLA ,CHENNAI CITY ,SCHOOL ,MEENCHUR ,Chief Minister MLA K. Stalin ,Dinakaran ,
× RELATED உள்துறை அமைச்சர் அமித்ஷா பேச்சுக்கு உத்தவ் தாக்கரே பதிலடி.!!