×

தன் மீது அவதூறு கருத்து பரப்புவோர் மீது நடவடிக்கை கோரி நடிகர் கருணாஸ் மீண்டும் காவல் ஆணையரிடம் புகார்

சென்னை : தன் மீது அவதூறு கருத்து பரப்புவோர் மீது நடவடிக்கை கோரி நடிகர் கருணாஸ் மீண்டும் காவல் ஆணையரிடம் புகார் அளித்துள்ளார். தமிழா பாண்டியன், பயில்வான் ரங்கநாதன் மற்றும் யூடியூப் சேனல்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி கருணாஸ் மனு அளித்துள்ளார்.

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட ஏ.வி. ராஜு சில நாட்களுக்கு நடிகை திரிஷா மற்றும் நடிகர் கருணாஸ் ஆகியோர் குறித்து அவதூறாக பேசியது கடும் சர்ச்சைகளை கிளப்பியது. இந்த விவகாரம் தொடர்பாக பல தரப்பினர் ஏ.வி. ராஜுவின் பேச்சுக்கு எதிராக கண்டனம் தெரிவித்தனர்.

இதையடுத்து நடிகர் கருணாஸ் தன்னைப் பற்றி அவதூறாக பேசிய அதிமுக முன்னாள் நிர்வாகி ஏ.வி.ராஜு மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் ஏற்கனவே பிகார் மனு அளித்திருந்தார்.

“பல யூடியூப் சேனலிலும் என்னை பற்றியும் மற்றும் திரிஷா பற்றியும் பல்வேறு உண்மைக்கு மாறான பொய்யான அவதூறு கருத்துகளை பரப்பி வருகின்றனர். மேற்படி நபர் மீதும் மற்றும் யூடியூப் சேனல்கள் மீதும் சட்டபடி தடவடிக்கை எடுத்து மேற்படி விடியோ பதிவினை நீக்க உத்திரவு பிறபிக்குமாறு தாழ்மையுடன் கேட்டுகொள்கிறேன்” என கருணாஸ் புகார் அளித்திருந்தார்.

இந்நிலையில் மீண்டும் தன் மீது அவதூறு கருத்து பரப்புவோர் மீது நடவடிக்கை கோரி நடிகர் கருணாஸ் மீண்டும் காவல் ஆணையரிடம் புகார் அளித்துள்ளார். தமிழா பாண்டியன், பயில்வான் ரங்கநாதன் மற்றும் யூடியூப் சேனல்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி கருணாஸ் மனு அளித்துள்ளார்.

The post தன் மீது அவதூறு கருத்து பரப்புவோர் மீது நடவடிக்கை கோரி நடிகர் கருணாஸ் மீண்டும் காவல் ஆணையரிடம் புகார் appeared first on Dinakaran.

Tags : Karunas ,Chennai ,Tamizha Pandian ,Pailwan Ranganathan ,YouTube ,
× RELATED கட்சியில் ரவுடியை சேர்க்கவே ஐபிஎஸ்...