×

இடைநின்ற மாணவர்களை பள்ளியில் சேர்க்க விருதுநகரில் சிறப்பு கள செயல்பாடு

விருதுநகர், பிப். 24: விருதுநகர் கலெக்டர் ஜெயசீலன் தகவல்: மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் இடைநின்ற மாணவர்களை, மீண்டும் பள்ளிகளில் சேர்க்கும் வகையில் சிறப்பு கள செயல்பாடு இன்று (பிப்.24) அனைத்து வட்டாரங்களிலும் நடைபெற உள்ளது. கலெக்டர், காவல் கண்காணிப்பாளர், மாவட்ட வருவாய் அலுவலர், திட்ட இயக்குநர், துணை ஆட்சியர்கள்,

துணைக்காவல் கண்காணிப்பாளர் மற்றும் வட்டாட்சியர்கள் உட்பட 80 அலுவலர்களுக்கு, ஒவ்வொரு அலுவலர்களுக்கும் தனித்தனியாக 10 முதல் 15 இடைநின்ற மாணவர்களின் விபரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இம்மாணவர்களை ஒவ்வொரு அலுவலர்களும் நேரில் சந்தித்து, இடைநிற்றலுக்கான காரணம் அறிந்து, குறைகளை நீக்கி, மீண்டும் பள்ளியில் சேர நடவடிக்கை எடுக்க உள்ளனர். பெற்றோர்கள், முழு ஒத்துழைப்பு தர வேண்டும் என தெரிவித்துள்ளார்.

The post இடைநின்ற மாணவர்களை பள்ளியில் சேர்க்க விருதுநகரில் சிறப்பு கள செயல்பாடு appeared first on Dinakaran.

Tags : Virudhunagar ,Collector ,Jayaseelan ,District Revenue ,Dinakaran ,
× RELATED பட்டாசு கடைகள், பட்டாசு குடோன்களை மூட கலெக்டர் உத்தரவு