×

ஒன்றிய அரசை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

ஏழாயிரம்பண்ணை, பிப். 24: வெம்பக்கோட்டை அருகே ஒன்றிய அரசை கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி மற்றும் இளைஞர் காங்கிரஸ் கமிட்டி வங்கி கணக்குகளை செயல்படாமல் முடக்கிய மோடி அரசின் வருமானவரித்துறையை கண்டித்து விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை அருகே தாயில்பட்டியில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தாயில்பட்டி பேருந்து நிலையம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மேற்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் கட்சி துணை தலைவர் சிவாஜிகார்த்திக் தலைமை வகித்தார்.

மேற்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் செயலாளர் சுடலை மற்றும் வெம்பக்கோட்டை வடக்கு வட்டார காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வகனி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசிய விருதுநகர் மேற்கு மாவட்ட கமிட்டி பொதுச்செயலாளர் ஜோதி நிவாஸ் கண்டன உரையாற்றினார். இந்த நிகழ்ச்சியில் வட்டார காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகளும், இளைஞர் காங்கிரஸ், மாணவர் காங்கிரஸ்,மகிளா காங்கிரஸ் என ஏராளமானோர் கலந்து கொண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

The post ஒன்றிய அரசை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Tags : Congress party ,union government ,Ajayarampannai ,Vembakotta ,All India Congress Committee ,Youth Congress Committee ,Modi government ,Dinakaran ,
× RELATED அதிக வரிவசூல் தரும் தமிழ்நாட்டை...