×

மேற்கு மாவட்ட அதிமுக ஆலோசனை கூட்டம்: முன்னாள் அமைச்சர் தலைமையில் நடந்தது

 

சிவகாசி, பிப். 24: சிவகாசி தொகுதியில் 15 இடங்களில் ஜெயலலிதா பிறந்தநாள் விழா நடைபெறுவதாக முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி தெரிவித்தார். முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 76வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு திருத்தங்கல் பாலாஜி நகரில் விருதுநகர் மேற்கு மாவட்ட அதிமுக சார்பாக ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. அதிமுக அமைப்பு செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கே.டி.ராஜேந்திரபாலாஜி தலைமை வகித்து பேசும்போது, சிவகாசி சட்டமன்ற தொகுதியில் சிவகாசி, திருத்தங்கல், விஸ்வநத்தம், சித்துராஜபுரம் உட்பட 14 இடங்களில் பிறந்த நாள் விழா நடக்கிறது.

ஒவ்வொறு பகுதிகளிலும் கட்சி கொடி ஏற்றி, இனிப்பு வழங்கி, அன்னதானம் வழங்கி நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகின்றது. 3 ஆயிரம் பேர் கலந்து கொள்ளும் பொதுக்கூட்டம் சிவகாசி பாவடி தோப்பு பகுதியில் நடக்கிறது. என்று பேசினார். கூட்டத்தில் முன்னாள் எம்எல்ஏ எம்.எஸ்.ஆர்.ராஜவர்மன், மான்ராஜ் எம்எல்ஏ, மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர் பலராம், மாவட்ட கழக துணைச் செயலாளர் சுப்பிரமணி, மாவட்ட மகளிர் அணி செயலாளர் சுபாஷினி ஒன்றிய கழக செயலாளர்கள் ஆரோக்கியம்,

லட்சுமிநாராயணன், சித்துராஜபுரம் பாலாஜி, கருப்பசாமி, மாநகரப் பகுதி கழகச் செயலாளர்கள் கிருஷ்ணமூர்த்தி, சரவணக்குமார், கருப்பசாமிபாண்டியன், சாம்(எ)ராஜஅபினேஷ்வரன், கவுன்சிலர் கரைமுருகன், தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் பாண்டியராஜன், தலைவர் எம்.கே.என்.செல்வம், மாவட்ட அம்மா பேரவை துணைச் செயலாளர் கார்த்திக், மாவட்ட டாஸ்மாக் மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் சுரேஷ் மற்றும் மாவட்ட, ஒன்றிய, மாநகர கழக நிர்வாகிகள் மற்றும் சார்பு அணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

The post மேற்கு மாவட்ட அதிமுக ஆலோசனை கூட்டம்: முன்னாள் அமைச்சர் தலைமையில் நடந்தது appeared first on Dinakaran.

Tags : West District AIADMK ,Minister ,Sivakasi ,Former minister ,KT Rajendrabalaji ,Jayalalithaa ,Chief Minister ,Virudhunagar West District AIADMK ,Thiruthangal Balaji Nagar ,Western District AIADMK Council ,
× RELATED சிவகாசியில் பட்டாசு மூலப்பொருள் உற்பத்தி குடோனில் பயங்கர வெடி விபத்து