×

கோடை கால பஞ்சத்தை போக்க குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும்

நீடாமங்கலம்: கோடை கால பஞ்சத்தை போக்க குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என்று கொரடாச்சேரி அருகே அம்மையப்பன் பள்ளியில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் அறிவுறுத்தப்பட்டது. நீடாமங்கலம் பல்நோக்கு சேவை இயக்கத்தின் சார்பில் திருவாரூர் மாவட்ட அளவில் மாணவர்களுக்கான சுற்றுச்சூழல் விழிப்புணர்வு தொடர்பான கட்டுரை போட்டி ,பேச்சு போட்டி, ஓவிய போட்டி உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. இதன் முதல் கட்டமாக கொரடாச்சேரி ஒன்றியத்தில் அம்மையப்பன் கிழக்கு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் மாணவர்களுக்கான சுற்றுச்சூழல் காப்போம் எனும் தலைப்பில் கட்டுரை போட்டி நடைபெற்றது. போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

The post கோடை கால பஞ்சத்தை போக்க குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் appeared first on Dinakaran.

Tags : Needamangalam ,Ammaiyappan School ,Koradacherry ,Tiruvarur ,Dinakaran ,
× RELATED உடல் ஆரோக்கியம் சீராக இருக்க இயற்கை...