×

மாவட்ட வருவாய் அலுவலர் தகவல் பெற்றோரால் பாராட்டி வளர்க்கப்படும் குழந்தைகளே சாதனையாளர்களாவர்

பட்டுக்கோட்டை: பட்டுக்கோட்டை அருகேயுள்ள அலிவலம் எஸ்.இ.டி. வித்யாதேவி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியின் 16ம் ஆண்டு விழா மற்றும் உணவுத் திருவிழா பள்ளி வளாகத்தில் நடந்தது. பள்ளி நிர்வாக இயக்குநர் கோவிந்தராசு தலைமை வகித்தார். பள்ளி அறங்காவலர் குழு உறுப்பினர் அசோகன், தாளாளர் சித்தராகோவிந்தராசு, முதல்வர் கதிரவன் முன்னிலை வகித்தனர்.முதுகலை தமிழ் ஆசிரியர் ராஜதுரை வரவேற்றார். முதுகலை வேதியியல் ஆசிரியர் அடைக்கலம் ஆண்டறிக்கை வாசித்தார். விழாவில் தமிழ்நாடு முன்னாள் காவல்துறை இயக்குனர் சைலேந்திரபாபு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசுகையில், பாராட்டி வளர்க்கப்படும் குழந்தைகளே சாதனையாளர்கள் ஆகின்றனர். குழந்தைகளை எப்பொழுதும் அடுத்தவரோடு ஒப்பிட்டு வளர்க்காதீர்கள். அவர்கள் சாதனை புரிவார்கள். இவ்வாறு அவர் பேசினார். விழாவில் தமிழாசிரியர் பாரதிகுகன், முதுகலை ஆங்கில ஆசிரியர் சக்திகுமார் தொகுத்து வழங்கினர். விழா ஏற்பாடுகளை உடற்கல்வி ஆசிரியார்கள் திரவியம், இலக்கியா மற்றும் ஆசிரியர்கள் செய்திருந்தனர். முதுகலை கணினி ஆசிரியை வினோதினி நன்றி கூறினார்.

The post மாவட்ட வருவாய் அலுவலர் தகவல் பெற்றோரால் பாராட்டி வளர்க்கப்படும் குழந்தைகளே சாதனையாளர்களாவர் appeared first on Dinakaran.

Tags : DISTRICT REVENUE OFFICER INFORMATION ,Pattukottai ,Alivalam S.E.T. ,16th annual function ,festival ,Vidyadevi Matriculation High School ,School Managing Director ,Govindarasu ,School ,Trustee Board ,Asokan ,Principal ,Siddhar Govindarasu ,District Revenue ,Dinakaran ,
× RELATED பட்டுக்கோட்டை ரயில் நிலையத்தில்...