×

ஞாயிறு தோறும் பாபநாசத்தில் 16 மேல்நிலைப்பள்ளிகளின் 2276 மாணவ,மாணவிகளுக்கு அரசின் இலவச ைசக்கிள்கள்

கும்பகோணம்: கும்பகோணம் அருகே பாபநாசம் அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற விழாவில் இலவச சைக்கிள்களை எம்.பி கல்யாணசுந்தரம், பாபநாசம் தொகுதி எம்எல்ஏ ஜவாஹிருல்லா ஆகியோர் வழங்கினர். பாபநாசம் அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா நடைபெற்றது. மாவட்ட கல்வி அலுவலர் ரவிச்சந்திரன் தலைமை வகித்தார். பள்ளி தலைமையாசிரியர் மணியரசன் வரவேற்றார். விழாவில் எம்.பி கல்யாணசுந்தரம், பாபநாசம் தொகுதி எம்எல்ஏ ஜவாஹிருல்லா ஆகியோர் 16 மேல்நிலைப்பள்ளிகளை சேர்ந்த 985 மாணவர்கள், 1291 மாணவிகள் என மொத்தம் 2,276 பேருக்கு சைக்கிள்களை வழங்கினர்.

The post ஞாயிறு தோறும் பாபநாசத்தில் 16 மேல்நிலைப்பள்ளிகளின் 2276 மாணவ,மாணவிகளுக்கு அரசின் இலவச ைசக்கிள்கள் appeared first on Dinakaran.

Tags : Papanasam ,Kumbakonam ,Kalyanasundaram ,Papanasam Constituency ,MLA ,Jawahirullah ,Babanasam Government Boys Higher Secondary School ,Papanasam Government Boys High School ,Tamil Nadu government ,
× RELATED வேளாண் சட்டத்துக்கு ஆதரவு அதிமுக வேட்பாளரை விவசாயிகள் முற்றுகை