×

கீழ்வேளுர் வட்டத்தில் நெல் கொள்முதல் நிலையங்களில் கலெக்டர் ஆய்வு

கீழ்வேளூர்: நாகை மாவட்டம் கீழ்வேளுர் வட்டத்தில் `உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்ட முகாமின் போது கீழ்வேளூர், குருக்கத்தி, நீலப்பாடி ஆகிய இடத்தில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் கீழ் செயல்பட்டு வரும் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை மாவட்ட கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் ஆய்வு மேற்கொண்டு இருப்பு குறித்தான பதிவேடுகளை ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின்போது கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்பட்ட மூட்டைகளின் ஈரப்பதம், தரம் மற்றும் எடை பரிசோதனை செய்யப்பட்டது. இதில் கீழ்வேளுர் கொள்முதல் நிலையத்தில் கூடுதல் எடைக்கு ரூ.10,000மும், குருத்தத்தி நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் மூட்டை 1-க்கு 1 கிலோ கூடுதல் வீதம் 2600 மூட்டைகளுக்கு ரூ.69.737 மற்றும் நீலப்பாடி கொள்முதல் நிலையத்தில் கூடுதல் எடைக்கு ரூ.10,200 அபராத தொகையாக கணக்கிடப்பட்டு சம்மந்தப்பட்ட கொள்முதல் பணியாளர்களிடமிருந்து பெற்று நூகர் பொருள் வாணிய கழக கணக்கில் கொண்டுவர உத்தரவிட்டார்.

The post கீழ்வேளுர் வட்டத்தில் நெல் கொள்முதல் நிலையங்களில் கலெக்டர் ஆய்வு appeared first on Dinakaran.

Tags : Kilvellur Circle ,Kilivellur ,Nagai district ,Tamil Nadu Consumer Goods Trading Corporation ,Kurukathi ,Neelpadi ,Kilivellur circle ,Dinakaran ,
× RELATED நாகை மாவட்டம் கீழ்வேளூரில் அருகே தீ...