×

தோகைமலை அருகே மாயமான இரும்பு வியாபாரியின் சடலம் மீட்பு

தோகைமலை: தோகைமலை அருகே மாயமான இரும்பு வியாபாரியின் சடலம் மீட்கப்பட்டது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே மொண்டிப்பட்டி ஊராட்சி போடுவார்பட்டி அழகிரி மகன் வெங்கடேசன் (41). இவர் பழைய இரும்பு வியாபாரம் செய்து வந்து உள்ளார். இதனால் வெங்கடேசன் பழைய இரும்புகளை சேகாிப்பதற்காக இரு சக்கர வாகனத்தில் பல்வேறு கிராமங்களுக்கு சென்று வியாபாரம் செய்து வந்து உள்ளார். இதே போல் வழக்கம் போல் கடந்த 21ம் தேதி அன்று வெங்கடேசன் பழைய இரும்பு வியாபாரத்திற்காக சென்று உள்ளார்.பின்னர் வியாபாரத்திற்கு சென்ற வெங்கடேசன் இரவு வெகு நேரம் ஆகியும் வீட்டிற்கு வரவில்லை. இதனால் இவரது உறவினர்கள் பல்வேறு கிராமங்களுக்கு சென்று தேடி உள்ளனர். இந்நிலையில் தோகைமலை காவல்சரகம் பொருந்தலூர் ஊராட்சி சின்னரெட்டிப்பட்டி பகுதியில் உள்ள பனைமரத்து பாறைக்குழியில் ஒருவர் உடல் கிடப்பதாக தோகைமலை போலீசாருக்கு தகவல் கிடைத்து உள்ளது. இதையடுத்து அங்கு சென்ற போலீசார் தீயணைப்புத் துறைக்கு தகவல் அளித்தனர். தகவல் அறிந்த தீயணைப்புத்துறை வீரர்கள் பனைமரத்து பாறைக்குழியில் இறங்கி உடலை மீட்டனர். உடலை மீட்ட போலீசார் விசாரணை செய்து உள்ளனர். இதில் கடந்த 21ம் தேதி அன்று மாயமான வெங்கடேசன் உடல் என தொியவந்து உள்ளது. இதையடுத்து வெங்கடேசன் மகன் லோகநாதன் என்பவர் தோகைமலை காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் வழக்கு பதிந்த போலீசார் மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு வெங்கடேசன் உடலை அனுப்பி வைத்து விசாரனை நடத்தி வருகின்றனர்.

The post தோகைமலை அருகே மாயமான இரும்பு வியாபாரியின் சடலம் மீட்பு appeared first on Dinakaran.

Tags : Thokaimalai ,Venkatesan ,Alagiri, Bodwarpatti Panchayat, Mondipatti ,Manaparai, Trichy District ,Dinakaran ,
× RELATED மூதாட்டியை தாக்கிய முதியவர் மீது வழக்கு