×

பவித்திரம் காலனி பகுதியில் உள்ள சாலையில் வேகத்தடைக்கு வெள்ளை வர்ண கோடுகள்

க.பரமத்தி: பவித்திரம் காலனி பகுதியில் புதியதாக அமைத்த வேகத்தடைக்கு வர்ண வெள்ளை கோடுகள் முன் அறிவிப்பு பலகை ஏதும் இல்லாததால் தினந்தோறும் வாகன ஓட்டிகள் தடு மாறி விபத்துக்குள்ளாகி வருவதால் உடனே வெள்ளைக் கோடுகள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். க.பரமத்தி ஒன்றியம் பவித்திரம் ஊராட்சி பவித்திரம்காலனி பகுதி வழியாக புன்னம்சத்திரம் செல்லும் நெடுஞ்சாலை முக்கிய பகுதியாக உள்ளது. இந்த சாலை வழியே வேலூர், வேலாயுதம்பாளையம், புன்னம்சத்திரம் சுற்று பகுதியினர் சின்னதாராபுரம் மூலனூர், தாராபுரம், பழனி, பொள்ளாச்சி போன்ற ஊர்களுக்கு அதிகளவில் வாகனங்கள் சென்று திரும்புகின்றன. இந்நிலையில் பவித்திரம் காலனி பகுதியில் அடிக்கடி சிறு சிறு விபத்துக்கள் நடப்பதால் அப்பகுதி மக்கள் நீண்ட நாட்களாக வேகத்தடை ஏற்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்து வந்தனர். இதனையடுத்து கடந்த வாரத்தில் புதியதாக வேகத்தடை அமைக்கப்பட்டுள்ளது. இந்த வேகத்தடை மேட்டிற்கு வெள்ளைக் கோடு வர்ணம் பூசப்படவில்லை. மேலும் முன் அறிவிப்பு பலகையும் இல்லாததால் கருப்புக் கலரில் உள்ள தார்ச்சாலை வழியே வேகமாக வரும் நான்கு சக்கர, இரு சக்கர வாகன ஓட்டுனர்களில் பலர் இந்த வேகத்தடை மேடு இருப்பதை அறியாமல், வாகன வேகத்தை குறைக்காமல் இயக்குவதால் தினமும் ஒருவராவது இந்த சாலையில் தடுமாறி கீழே விழுந்து காயம் அடைந்து செல்லும் அவல நிலை ஏற்பட்டு வருகிறது.

The post பவித்திரம் காலனி பகுதியில் உள்ள சாலையில் வேகத்தடைக்கு வெள்ளை வர்ண கோடுகள் appeared first on Dinakaran.

Tags : Pavitram Colony ,K. Paramathi ,
× RELATED க.பரமத்தி அருகே உடல் அழுகிய நிலையில் ஆண் சடலம்