×

₹2.56 லட்சம் புகையிலை மதுபாட்டில்கள் பறிமுதல்

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அருகே கர்நாடகாவில் இருந்து காரில் கடத்தி வரப்பட்ட ₹2.56 லட்சம் மதிப்பிலான புகையிலை பொருட்கள் மற்றும் மதுபான பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். கிருஷ்ணகிரி அடுத்த குருபரப்பள்ளி மேம்பாலம் அருகில், ஓசூர் – கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் குருபரப்பள்ளி போலீஸ் எஸ்.எஸ்.ஐ., ரமேஷ் மற்றும் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த சொகுசு காரை நிறுத்தினர். சற்று தொலைவில் காரை நிறுத்திய டிரைவர், அதிலிருந்து இறங்கி தப்பியோடிவிட்டார். இதையடுத்து போலீசார் அந்த காரை சோதனையிட்டனர். அதில், தடை செய்யப்பட்ட ₹2.50 லட்சம் மதிப்பிலான புகையிலை பொருட்களும், ₹6,500 மதிப்புள்ள கர்நாடக மதுபாட்டில்களும் இருந்தது தெரிந்தது. இவை கர்நாடகாவில் இருந்து கடத்தி வந்தது தெரியவந்துள்ளது. இதையடுத்து கடத்தல் பொருட்களுடன் காரை பறிமுதல் செய்த போலீசார், காரில் வந்தவர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post ₹2.56 லட்சம் புகையிலை மதுபாட்டில்கள் பறிமுதல் appeared first on Dinakaran.

Tags : Krishnagiri ,Karnataka ,Guruparapalli ,Hosur ,Krishnagiri National Highway… ,Dinakaran ,
× RELATED கிருஷ்ணகிரி அருகே உள்ள SBI வங்கி ATM-ஐ...