×

சனி, ஞாயிற்றுக் கிழமைகளிலும் வரி வசூல் மையங்கள் செயல்படும்

 

ஈரோடு, பிப். 24: ஈரோடு மாநகராட்சி வரி வசூல் மையங்கள் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் செயல்படும் என்று மாநகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது. ஈரோடு மாநகராட்சியில் உள்ள 4 மண்டலங்களிலும் சொத்துவரி, காலியிட வரி, குடிநீர் கட்டணம், தொழில்வரி, பாதாள சாக்கடை கட்டணம், திடக்கழிவு மேலாண்மை கட்டணம் மற்றும் குத்தகை இன வரிகள் ஆகியவை வரி வசூல் மையங்களில் வசூல் செய்யப்பட்டு வரப்படுகிறது.

நிதியாண்டு முடிவடைய இன்னும் ஒரு மாத காலம் மட்டுமே உள்ளதால் வரியினங்களை உரிய காலத்திற்குள் செலுத்த பொதுமக்களுக்கு, மாநகராட்சி நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.இந்நிலையில் பொதுமக்களின் வசதிக்காக மார்ச் 31ம் தேதி வரை, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை உள்பட அனை த்து நாட்களிலும் வரி வசூல் மையங்கள் செயல்படும் என்றும், பொது மக்கள், மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய வரிகளை உடனடியாக செலுத்தி ஜப்தி மற்றும் குடிநீர் இணைப்பு துண்டிப்பு நடவடிக்கைகளை தவிர்க்க வேண்டும் என்றும் மாநகராட்சி நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.

The post சனி, ஞாயிற்றுக் கிழமைகளிலும் வரி வசூல் மையங்கள் செயல்படும் appeared first on Dinakaran.

Tags : Erode ,Erode Municipal Corporation Administration ,Erode Corporation ,Dinakaran ,
× RELATED ஈரோடு மாநகராட்சியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பு இல்லை