×

6 மின் திருட்டுகள் கண்டுபிடிப்பு இழப்பீட்டு தொகை ரூ.5.94 லட்சம் வசூல்

 

காஞ்சிபுரம்: தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் வெளியிட்ட அறிக்கை: கடந்த ஜன.10ம் தேதி தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் சென்னை அமலாக்க கோட்டத்திற்குட்பட்ட சென்னை மையம், சென்னை வடக்கு, சென்னை தெற்கு, சென்னை மேற்கு, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் அமலாக்க அதிகாரிகள் மின் பகிர்மான வட்டத்திற்குட்பட்ட பகுதியில் கூட்டு ஆய்வு மேற்கொண்ட போது 6 மின் திருட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டது.

இதனால், ரூ.5,67,116 இழப்பீட்டு தொகையாக மின் நுகர்வோருக்கு விதிக்கப்பட்டது. மேலும், சம்பந்தப்பட்ட மின் நுகர்வோர்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டு குற்றவியல் நடவடிக்கையை தவிர்க்க முன்வந்து அதற்குரிய சமரசத் தொகை ரூ.27 ஆயிரம் செலுத்தியதால் அவர்கள் மீது காவல் நிலையத்தில் புகார் ஏதும் பதிவு செய்யப்படவில்லை. மின் திருட்டு சம்பந்தமான தகவல்களை சென்னை அமலாக்க செயற்பொறியாளர் கைபேசி எண்ணில் 94458 57591 தெரிவிக்கலாம்.

The post 6 மின் திருட்டுகள் கண்டுபிடிப்பு இழப்பீட்டு தொகை ரூ.5.94 லட்சம் வசூல் appeared first on Dinakaran.

Tags : Kanchipuram ,Tamil Nadu Power Generation and Distribution Corporation ,Chennai ,Zone ,Chennai Center ,Chennai North ,Chennai South ,Chennai West ,Chengalpattu ,Dinakaran ,
× RELATED சென்னை, காஞ்சிபுரத்தில் முதியோர்கள்,...