×

காஞ்சிபுரம் வடக்கு ஒன்றிய திமுக சார்பில் முதல்வர் பிறந்தநாள் பொதுக்கூட்டம்

 

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் தெற்கு மாவட்டம், வடக்கு ஒன்றியம் சார்பில், முதல்வர் மு.க.ஸ்டாலினின் 71வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் திம்மசமுத்திரம் ஊராட்சியில் நடைபெற்றது. ஒன்றிய செயலாளர் குமார் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் தேவேந்திரன், சுந்தரம், பாலாஜி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.உத்திரமேரூர் எம்எல்எ சுந்தர், தலைமை நிலைய பேச்சாளர் ஆரணிமாலா, காஞ்சிபுரம் எம்பி செல்வம், எம்எல்ஏ எழிலரசன் ஆகியோர் கலந்துகொண்டு, தமிழக அரசின் சாதனைகள் பற்றியும், தமிழ்நாடு முதல்வர் பெண்களுக்கான அறிவித்த நலத்திட்டங்கள் மற்றும் அனைத்து தரப்பு மக்களுக்கும் செய்யும் வளர்ச்சி பணிகள் மற்றும் திட்டங்கள் குறித்தும் விரிவாக பேசினார்கள்.

இந்நிகழ்ச்சியில், ஒன்றிய பெருந்தலைவர் மலர்கொடிகுமார், தலைமை செயற்குழு உறுப்பினர் சுகுமார், மாவட்ட ஊராட்சி துணை தலைவர் நித்தியா சுகுமார், ஒன்றிய நிர்வாகிகள் மாரிமுத்து, ரமேஷ், இளஞ்செழியன், வேலுச்சாமி, சசிக்குமார், ரவி, கருணாகரன், அணிகள் நிர்வாகிகள், கிளை செயலாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். பூவரசன் நன்றி கூறினார்.

The post காஞ்சிபுரம் வடக்கு ஒன்றிய திமுக சார்பில் முதல்வர் பிறந்தநாள் பொதுக்கூட்டம் appeared first on Dinakaran.

Tags : Kanchipuram North Union DMK ,Chief Minister ,Kanchipuram ,Kanchipuram South District, North Union ,M.K.Stalin ,Thimmasamuthram panchayat ,Union ,Kumar ,Administrators ,Devendran ,Sundaram, ,Balaji ,Uttaramerur ,MLA ,Kanchipuram North Union ,DMK ,Dinakaran ,
× RELATED ராகுல் காந்தி முதல்வர் ஸ்டாலினுக்கு...