×

சென்னை மாநகராட்சி மேயர் பிரியா சென்ற கார் விபத்தில் சிக்கியது

சென்னை: சென்னை மாநகராட்சி மேயர் பிரியா சென்ற கார் விபத்தில் சிக்கியது. முன்னால் சென்ற கார் திடீரென திரும்பியதால் அந்த கார் மீது பிரியா சென்ற கார் மோதியது. இதில், பின்னால் வந்த லாரியும் மேயர் பிரியா சென்ற காரின் பின்பக்கமாக மோதியது. எனினும் மேயர் பிரியா காயமின்றி தப்பினார்.

சென்னை மாநகராட்சி மேயர் பிரியா இன்று பணி முடிந்து காரில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது முன்னால் சென்ற கார் ஒன்று திடீரென வளைவில் திரும்பியது. இதனால் எதிர்பாராத விதமாக அந்த கார் மீது மேயர் பிரியா சென்ற கார் மோதியது. திடீரென இந்த காரும் நின்றதால், பின்னால் வந்த லாரி மேயர் பிரியாவின் காரின் மீது பின்பக்கமாக மோதியது.

எதிர்பாரத விதமாக அடுத்தடுத்து நடந்த விபத்தால் மேயர் பிரியா சென்ற காரின் டிரைவர் காயமடைந்தார். எனினும் மேயர் பிரியாவுக்கு எந்த வித காயமும் ஏற்படவில்லை. இதையடுத்து கார் டிரைவர் உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். விபத்து தொடர்பாக போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

 

The post சென்னை மாநகராட்சி மேயர் பிரியா சென்ற கார் விபத்தில் சிக்கியது appeared first on Dinakaran.

Tags : Chennai Municipal Mayor Priya ,Chennai ,Priya ,Mayor Priya ,Dinakaran ,
× RELATED கடந்த தேர்தலை விட இந்த தேர்தலில் திமுக...