×

கோவை பொள்ளாச்சி கூட்டு பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்ட 9 பேரும் மீண்டும் மார்ச் 1-ல் ஆஜராக ஆணை!

கோவை: கோவை பொள்ளாச்சி கூட்டு பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்ட 9 பேரும் மீண்டும் மார்ச் 1-ல் ஆஜராக ஆணையிட்டுள்ளது. பொள்ளாச்சியில் கல்லூரி மாணவிகளை பாலியல் வன்கொடுமை செய்தது தொடர்பான வீடியோக்கள் கடந்த 2019-ம் ஆண்டு வெளியாகி அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் சபரிராஜன், திருநாவுக்கரசு, வசந்தகுமார், சதீஷ், மணிவண்ணன், அருளானந்தம், ஹிரன்பால், பாபு. அருண்குமார் ஆகிய 9 பேர் கைது செய்யப்பட்டனர்.

இது தொடர்பான வழக்கு விசாரணை கோவை மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. பாதிக்கப்பட்ட 8 பெண்கள் வாக்குமூலம் கொடுத்துள்ள நிலையில் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் விசாரணை நடைபெற்று வந்தது. கடந்த 2021-ம் ஆண்டு சி.பி.ஐ விசாரணை நடத்தி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். இந்நிலையில் அதில் கூடுதல் ஆவணங்களை இணைத்து நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. மேலும் 30-க்கும் மேற்பட்ட பாலியல் துன்புறுத்தல் வீடியோக்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

சி.பி.ஐ தாக்கல் செய்த கூடுதல் ஆவணங்களின் நகல்கள் கேட்டு 9 பேரும் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்நிலையில் இன்று 9 பேரும் 2 ஆண்டுக்கு பின் கோவை மகளிர் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்டனர். நீதிபதி நந்தினி தேவி முன்னிலையில் குற்றவாளிகள் 9 பேர் முன்னிலையிலும் கைப்பற்றப்பட்ட வீடியோக்கள் ஆய்வு செய்யப்பட்டு, அடையாளம் காணப்பட்டது. கோவை மகளிர் நீதிமன்றத்தில் 4 மணி நேர விசாரணைக்குப் பிறகு 9 பேரும் சேலம் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

 

The post கோவை பொள்ளாச்சி கூட்டு பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்ட 9 பேரும் மீண்டும் மார்ச் 1-ல் ஆஜராக ஆணை! appeared first on Dinakaran.

Tags : Gowai Pollachi ,KOWAI ,KOWAI POLLACHI ,Pollachi ,Dinakaran ,
× RELATED விவசாயிகள் பயன்பெறும் வகையில் ஈஷா...