×

அன்னாசி பழச்சாறின் பலன்கள்!

நன்றி குங்குமம் டாக்டர்

நோய் எதிர்ப்பு சக்தி நிறைந்த அன்னாசிப்பழம் அஜீரணத்தைப் போக்கி பசியைத் தூண்டும். ஞாபக சக்தியை அதிகரிப்பதிலும் அன்னாசிப்பழத்துக்கு பெரும்பங்கு உண்டு.
அன்னாசிப்பழச் சாறுடன் மிளகுத்தூள், தேன் கலந்து சாப்பிட்டால் இருமல், தொண்டை கரகரப்பு சளித்தொல்லை சட்டென விலகும்.இரண்டு வெற்றிலையுடன் 10 துளசி இலையை சேர்த்து அரைத்து, அன்னாசிப் பழச்சாற்றுடன் கலந்து குடித்தால் எப்பேர்பட்ட தலைவலியும் நீங்கும்.அன்னாசிப் பழத்துடன் திராட்சை சாறு கலந்து குடித்தால் ரத்த சோகை நீங்கும். பசும்பாலுடன் அன்னாசிப்பழச்சாறை சம அளவு கலந்து சாப்பிட்டு வந்தால் ஆரம்பகட்ட அல்சர் நீங்கும்.

ஒரு கப் அன்னாசிப்பழச் சாறுடன் கால் டம்ளர் அறுகம்புல் சாறு கலந்து குடித்தால் மாதவிடாய் கோளாறுகள் சரியாகும்.அன்னாசிப்பழச் சாறில் எலுமிச்சைச் சாறு கலந்து குடிக்க அசதி, சோர்வு நீங்கி உடல் புத்துணர்ச்சி பெறும், அன்னாசிப்பழச் சாறில் இஞ்சிச்சாறு கலந்து குடிக்க பித்த வாந்தி நிற்கும்.நெல் பொரியை பொடித்து, அன்னாசிப்பழச் சாறுடன் கலந்து சாப்பிட்டால் பேதி நிற்கும்.அன்னாசி பழச் சாற்றில் இரண்டு சிட்டிகை சுக்குப்பொடி கலந்து குடித்தால் கை, கால் மூட்டு வலிகள் குணமாகும்.அன்னாசிப்பழச் சாறில் சிறிது கசகசாவை அரைத்து கலந்து குடித்தால் தூக்கமின்மை சரியாகி, நல்ல தூக்கம் வரும்.

தலைமுடியை பாதுகாப்பதுடன் கண்டிஷனராகவும் செயல்படுகிறது அன்னாசி. அன்னாசிப்பழச்சாறுடன் 2 தேக்கரண்டி வெந்தயபவுடர் கலந்து தலையில் தேய்த்து குளித்து வர பளபளப்பு கூடுவதுடன் கூந்தல் வளர்ச்சியும் அதிகரிக்கும்.முகத்தில் வயதானதால் ஏற்படும் சுருக்கத்தை போக்கவல்லது. இரண்டு தேக்கரண்டி பாலுடன், 1 தேக்கரண்டி அன்னாசிப்பழச்சாறு கலந்து ஒருநாள் விட்டு ஒருநாள் முகத்தில் பூசி கழுவிட சுருக்கம் மறைந்து, முகம் பளபளப்பாக இருக்கும்.இரண்டு தேக்கரண்டி பயத்தமாவு, தயிர் எடுத்து இவை கலக்கும் அளவுக்கு அன்னாசி சாறு சேர்த்து ஷாம்பூ போல தலையில் தேய்த்துக் குளித்து வர, வெடிப்பு நீங்கி கூந்தல் பளபளப்பாகும். கூந்தல் வெடிப்பை நீக்குவதோடு, முடிவளர்ச்சியையும் தூண்டும்.

தொகுப்பு: மகாலட்சுமி சுப்ரமணியன்

The post அன்னாசி பழச்சாறின் பலன்கள்! appeared first on Dinakaran.

Tags : kumkum ,Dinakaran ,
× RELATED வளர்சிதை மாற்றத்திற்கு உதவும் ஜாதிக்காய்!