×

10 நாட்களில் 2வது விபத்து: தெலங்கானா பிஆர்எஸ் எம்எல்ஏ லாஸ்யா நந்திதா கார் விபத்தில் மரணம்!

ஹைதராபாத்: தெலுங்கானா மாநிலம் செகந்திராபாத் கண்டோன்மென்ட் எம்எல்ஏ லாஸ்யா நந்திதா (37) கார் விபத்தில் உயிரிழந்தார். தெலுங்கானா மாநிலம் செகந்திராபாத் கண்டோன்மென்ட் சட்டமன்ற உறுப்பினராக இருப்பவர் லாஸ்யா நந்திதா (வயது37). பி.ஆர்.எஸ். கட்சியை சேர்ந்தவரான இவர் நந்திதா. இந்நிலையில் இன்று காலை பாசராவிலிருந்து கட்ச்பவுளிக்கு காரில் காரில் சென்று கொண்டிருந்தபோது அவர் பயணித்த கார் சுல்தான்பூர் அருகே சாலை தடுபான் மீது மோதி விபத்து ஏற்பட்டது.

விபத்தில் படுகாயம் அடைந்த நந்திதாவை அங்கிருந்தவர்கள் அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். கார் டிரைவர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடந்த 10 நாட்களுக்கு முன்பு லாஸ்யா நந்திதா செர்லப்பள்ளி என்ற இடத்தில் சென்றுகொண்டிருந்த போது கார் மீது ஆட்டோ மோதியதில், அவரது தலையில் காயம் ஏற்பட்டது. அடுத்த 10 நாட்களில் நடந்த விபத்தில் நந்திதா உயிரிழந்திருப்பது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. லாஸ்யா நந்திதாவின் மறைவுக்கு பல்வேறு தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

The post 10 நாட்களில் 2வது விபத்து: தெலங்கானா பிஆர்எஸ் எம்எல்ஏ லாஸ்யா நந்திதா கார் விபத்தில் மரணம்! appeared first on Dinakaran.

Tags : Telangana ,Nandita ,Hyderabad ,Telangana State Secunderabad ,Condominium MLA ,Lasya Nandita ,Telangana State Secunderabad Condominium Assembly ,B. R. S. ,Telangana PRS MLA ,
× RELATED கார்கள் மோதல்: 3 பேர் பலி